கைகொடுத்த பூராணின் அதிரடி ஆட்டம் , கடைசி பந்தில் த்ரில்லிங் வெற்றியை கண்ட லக்னவ் அணி
ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோலாகலமாக துவங்கியது.அந்த வரிசையில் இன்று இரவு 7.30 மணிக்கு எம்.சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற லக்னோ
ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோலாகலமாக துவங்கியது.அந்த வரிசையில் இன்று இரவு 7.30 மணிக்கு எம்.சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பௌலிங்கை முடிவு செய்தது. ஆனால் அது சரியான முடிவாக இருக்க வில்லை.
One of the craziest scenes on the final ball:
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 10, 2023
LSG needed 1 with just 1 wicket in hand on the final ball. Harshal Patel tried to run out Ravi Bishnoi at the non striker's end, but fumbled.
LSG wins with a bye single! pic.twitter.com/6BBUW4j5wI
அதன் படி முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான கோலி அதிரடியாக விளையாடி சிக்சர்களும் பவுண்டரிகளையும் பறக்கவிட்ட நிலையில் 44 பந்துகளில் 61 ரன்களை அடித்து அமித் மிஷ்ராவிடம் விட்கெட்டை பறிகொடுத்தார்.அதன் பிறகு நிதானமாக விளையாடி வந்த டு பிளெசிஸ் மேக்ஸ்வெல் வந்த பின் அதிரடியாக மாறி பந்துகளை மைந்தானதிற்கு வெளியே அடிக்க ஆரம்பித்தார்
பின்னர் பெங்களூரு கேப்டன் டு பிளெசிஸிடன் இணைந்த மேக்ஸ்வெலும் ரன்களை அதிரடியாக ஆடி குவிக்க ஆரம்பித்தனர். இருவரும் இணைந்து 44 பந்துகளில் 100 ரன்களை கடந்து லக்னோ அணியின் பௌலர் பந்தாடினார்கள்.அது லக்னோ அணி ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது. இந்நிலையில் அணியின் கேப்டன் டு பிளெசிஸ் 5 சிக்சர்களும் 5 பவுண்டரிகளையும் அடித்து 79 ரன்களை குவித்தார்.
ஆரம்பத்தில் இருந்து ருத்ர தாண்டவம் ஆடிய மேக்ஸ்வெல் 24 பந்துகளிலே 50 ரன்களை பூர்த்தி செய்தார். 6 சிக்சர்கள் மற்றும் 3பவுண்டரிகளையும் அடித்து 59 ரன்களை குவித்தார்.அதன் பின் மார்க் வுட் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட்கள் இழப்பிற்க்கு 212 ரன்களை குவித்து. இந்நிலையில் தற்போது இரண்டவது இனிங்கை ஆட வந்த லக்னோ அணி தொடக்கத்திலேயே தடுமாறியது.
Nicholas Pooran, What a player. pic.twitter.com/Z9gkf1Lj68
— Johns. (@CricCrazyJohns) April 10, 2023
இந்நிலையில் இமாலய இலக்கை எடுக்க களமிறங்கிய லக்னோ தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நிலைமையில் களமிறங்கிய லக்னோ வீரர் நிகோலஸ் பூரான் அதிரடியாக ஆடி பெங்களூரு அணியை கலங்க விட்டார். அதிலும் குறைவான பந்துக்கு அதிக ரன்கள் தேவைப்படும் நேரத்தில் அதிரடியாக ஆடி 15 பந்துகளில் அரை சதம் அடித்தார் நிகோலஸ் பூரான்.
One of the craziest scenes on the final ball:
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 10, 2023
LSG needed 1 with just 1 wicket in hand on the final ball. Harshal Patel tried to run out Ravi Bishnoi at the non striker's end, but fumbled.
LSG wins with a bye single! pic.twitter.com/6BBUW4j5wI
ஆனால் 16 வது ஓவரின் போது சிராஜ் போட்ட பந்தை அடித்த பூரான் அவுட் ஆகினார். ஆனால் அவர் எதற்காக வந்தாரோ அதனை சரியாக செய்து விட்டு சென்று விட்டார். இந்நிலையில் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் லக்னோ அணிக்கு பயத்தை கூட்டி தொடர்ந்து அவுட் ஆகினார்கள். இந்நிலையில் கடைசி பந்தில் 1 ரன்கள் தேவைப்படும் நேரத்தில் கேட்சை விட்டார் DK அதோடு ரன் அவுட்டிலும் பேட்ஸ்மேன் உள்ளே இருக்கும் போது கோட்டை விட்டார். இந்நிலையில் ஓவர்கள் முடிவில் அபார வெற்றி பெற்றது லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணி