100 அடித்த ட்ரெண்ட் போல்ட் – டக் அவுட்டான விராட் வீடியோ இதோ.

ஐபிஎல் 2023 க்கான 32 லீக் போட்டியில் பெங்களூரு உள்ள சின்ன சாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொண்டன. டாஸை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச முடிவு செய்தது. அதன் படியின் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் முதல்

By ·

ஐபிஎல் 2023 க்கான 32 லீக் போட்டியில் பெங்களூரு உள்ள சின்ன சாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொண்டன. டாஸை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச முடிவு செய்தது. அதன் படியின் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் முதல் ஓவரின் முதல் பந்திலேயே அணிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தார்.

அதாவது விராட் கோலி முதல் பந்திலேயே ஸ்டிரைக்கில் இருந்தார். இந்நிலையில் போட்டியின் முதல் பந்தை ஸ்டம்ப் லைனில் வீசினார் போல்ட். அந்த பந்து நேரடியாக விராட் கோலியின் காலியில் பட்டது இதனால் அம்பயர் எல்பிடபிள்யூ கொடுத்தார். அதே சமயம் அவுட் ஆன பிறகு டிஆர்எஸ் எடுக்காமல் தலை குனிந்த நிலையில் கோஹ்லி பெவிலியன் திரும்பினார். விராட் கோலியின் விக்கெட்டினால் முதல் பந்திலேயே ஆர்சிபி அணிக்கு பெரிய அடி கிடைத்தது.

மேலும் அந்த விக்கெட்டின் முலம் ட்ரெண்ட் போல்ட் தன்னுடைய 100 ஐபிஎல் விக்கெட்டை எடுத்துள்ளார். அந்த வீடியோ தான் தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் தற்போது தனது ஐபிஎல் வாழ்க்கையில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த போட்டிக்கு முன்பு போல்ட் 83 போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளுடன் இருந்தார்.

இந்நிலையில் இன்று ஆர்சிபிக்கு எதிராக தனது முதல் பந்திலேயே விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி தனது 100வது விக்கெட்டை நிறைவு செய்தார். அதோடு 2020 ஐபிஎல் போட்டிகளில் இருந்து முதல் ஓவரில் அதிகவிக்கெட்டுகளை வீழ்த்தியவரும் ட்ரெண்ட் போல்ட் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியொரு நிலையில் தற்போது நடந்துவரும் போட்டியை பொறுத்தவரையில் டுப்ளசிஸூம் 32 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்து அணிக்கு பக்க பலமாக இருந்தார்.

ராஜஸ்தான் அணி பந்து வீச தடுமாறி கொண்டு இருந்த நிலையில் ரன்அவுட் ஆகி வெளியேறினார் டுப்ளசிஸ். மேக்ஸ்வெல் நிதானமாகவும் தேவையான நேரங்களில் பவுண்டரிகளை அடித்தும் 14வது ஓவரில் அணியின் ஸ்கோர் 150 ரன்களை கடந்தது பெங்களூரு அணி. ஆனாலும் அவராலும் 20 வது ஓவர் வரை விளையாட முடியாமல் 77 ரன்களில் அஷ்வினிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதற்கு பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன்கள் அடிக்காத நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்களை எடுத்துள்ளது ஆர்சிபி.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை