கேப்டன் vs கேப்டன், ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு ஹர்திக் பாண்டிய கொடுத்த ரியாக்சன்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதின. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 207 ரன்கள் குவித்தது. 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ்

By ·

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதின. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 207 ரன்கள் குவித்தது. 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, கேப்டன் ரோகித் சர்மா, இரண்டாவது ஓவரிலேயே ஹர்திக் பாண்டியாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 208 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ரோஹித்துக்கு முன்னால் களமிறங்கிய இஷான் கிஷான், ஒவ்வொரு போட்டியையும் போலவே இந்தப் போட்டியிலும் மெதுவாக விளையாடினார். இதனால் ரன் எடுக்க வேண்டும் என்கிற அழுத்தம் ரோஹித் மீது வந்தது. அப்படிப்பட்ட நிலையில் தான் முகமது ஷமி வீசிய முதல் ஓவரில் இஷான் கிஷான் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து, இரண்டாவது ஓவரில் ரோஹித் அதிக ரன்கள் எடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

அப்படி இருக்கும் போதுதான் பந்து ஸ்விங் ஆகிக் கொண்டிருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரன்களை எடுப்பது சுலபமாக இருக்கவில்லை. பாண்டியா வீசிய இன்சைட் ஷார்ட் பந்தை ரோஹித்தால் புரிந்து கொள்ள முடியாமல் பாதி தூரத்தில் பேட்டை நிறுத்தினார். இதனால் பந்து பேட்டின் விளிம்பில் பட்டு காற்றில் சென்றது. இதனையடுத்து ஹர்திக் ஒரு எளிய கேட்சை எடுத்து ரோஹித்தை பெவிலியன் அனுப்பினார்.

இந்த நிகழ்வின் போது ஹர்திக் பாண்டியா பெவிலியன் செல்லும் ரோஹித்தை பார்த்து நின்றார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 208 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களம் கண்ட  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பமே தடங்கலாக அணியின் கேப்டன் 2 ரன்களிலே வெளியேரினார். அந்த நிலையில் இருந்தே மும்பை அணி தடுமாற்றத்தையே சந்தித்தனர். இஷான் கிஷனும் 10 ரன்களில் வெளியேறினார்.

திலக், கிரீன், டிம் டேவிட் மற்றும் சூர்யகுமார் யாதவ் சொற்ப ரன்களில் வெளியேர மும்பை அணிக்கு இருந்த வெற்றி வாய்ப்பும் வெளியேறியது. சாவ்லா ஒரு சில பந்துகளை பறக்க விட்டு வந்தார்.    குஜராத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியமல திணறியே வந்தனர். மும்பை அணி வீரர்கள் ஆரம்பம் முதல் இருந்தே கஷ்ட்டப்பட்டே வந்தனர். மும்பை அணி 20 வது ஓவர்களில் 152 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.இறுதியில் குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை