இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் முதல் 2 போட்டிகள் விலகிய ரஷீத் கான் – காரணம் தெரியுமா?

ஐபிஎல் 2023 தொடரானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த வருட ஐபிஎல் தொடரில் தொடக்கம் முதல் அற்புதமாக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பைனல் போட்டியில் மோதியது. இதில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து மழையால் போட்டி 15 ஓவர்கள

By ·

ஐபிஎல் 2023 தொடரானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த வருட ஐபிஎல் தொடரில் தொடக்கம் முதல் அற்புதமாக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பைனல் போட்டியில் மோதியது. இதில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து மழையால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் சென்னை அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் முடிவடைந்த நிலையில் ரசிகர்களின் கவனம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு தற்போது திரும்பியுள்ளது.

இந்நிலையில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிராக ஒரு நாள் போட்டி தொடங்குகியது. மூன்று நாட்கள் கொண்ட இந்த ஒருநாள் போட்டியில் மதிஷா புதிரான முதல் முறையாக ஒருநாள் போட்டிக்கு இலங்கை அணியில் அறிமுகமாக்கினார். ஏற்கனவே டி20 தொடரில் விளையாடிய நிலையில் ஒருநாள் போட்டியிலும் இணைந்தார் பதிரான. இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் டாஸை வென்ற ஆப்கானித்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனால் முதலில் களமிறங்கிய இலங்கை அணி பேட்டிங் செய்ய வந்தது. ஆனால் 50 ஓவர்கள் முடிவில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த சூழ்நிலையால் இலங்கை அணி பந்துவீச்சின் மீது நம்பிக்கை வைக்க வேண்டியிருந்தது. 268 ரன்கள் எடுத்தால் வென்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானித்தான் அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 46.5 ஓவர்களில் வெற்றி பெற்றது.

ஆனால் ஆப்கானிஸ்தானின் பிரபல சூழல்பந்துவீச்சாளரான ரஷீத் கான் விளையாட வில்லை. 3 நாட்கள் கொண்ட இந்த ஒருநாள் போட்டியில் 2 பெட்டிகளில் ரஷீத் கான் விளக்கியுள்ளார். இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். காரணம் ரஷீத் கான்உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 லீக் போட்டிகளில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். ஆனாலும் சர்வதேச கிரிக்கெட்டில் தாய் நாட்டுக்காக அவர் விளையாடவும் தவறுவதில்லை. இப்படியிருக்கும் போது ரஷீத் கான் ஏன் விளையாடவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதற்கு காரணம் அவருக்கு தற்போது கீழ் முதுகில் பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் நடக்கும் டி20 போட்டிகளில் கலந்து விளையாடும் ரஷீத் கானுக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்னை சரியான ஓய்வுஎடுத்துக் கொண்டால் சரியாகிவிடும். ஆனால் அதே பிடிப்புடன் மேலும் போட்டிகள் விளையாடும் பொது அது காயமாக மாற வாய்ப்பு இருப்பதினால் முன்னெச்சரிகையாக அவர் இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான இந்த முதல் இரண்டு போட்டிகளில் ரஷீத் கான் விளையாடவில்லை என்றாலும் நிச்சயம் இன்னும் சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை