ருத்துராஜும் ஜெய்ஸ்வாலும் ஒரே மாதிரி தான்.. ஆனால் சர்பராஸ் கான் தான் பாவம் – ரிக்கி பாண்டிங் அதிரடி.

ஆசிய உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணிக்கு கேப்டனாக ருதுராஜ் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் ஜெய்சவாலும் ஐபிஎல் போட்டியில் சிற்பபாக விளையாடிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா அணியில் இடம் கிடைத்தாலும் ஜெய்ஸ்வால் மட்டுமே விளையாடுகிறார், இருந்த போதிலும் ருதுர

By ·

ஆசிய உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணிக்கு கேப்டனாக ருதுராஜ் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் ஜெய்சவாலும் ஐபிஎல் போட்டியில் சிற்பபாக விளையாடிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா அணியில் இடம் கிடைத்தாலும் ஜெய்ஸ்வால் மட்டுமே விளையாடுகிறார், இருந்த போதிலும் ருதுராஜுக்கு அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தான் ஆஸ்திரேலிய ஜாம்பவன் ரிக்கி பாண்டிங் இவர்கள் இருவரையும் குறித்து பேசியுள்ளார்.

ரிக்கி பாண்டிங் பேட்டி :

யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல் போட்டியில் ஒரு சிறப்பான காரியத்தை செய்தார். அவர் கிட்டத்தட்ட ஒரு சுவிட்ச்சை தட்டியதன் மூலம் ஒரே இரவில் சூப்பர் ஸ்டாராக வளர்ந்து விட்டார். அனைவருக்கும் தெரியும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு திறமையான இளம் வீரர் என்று. ஆனால் நான் அவரிடம் ஐபிஎல் போட்டியில் பார்த்தது அவருக்கு எல்லா வகையான திறமைகளும் இருக்கிறது என்றார் ரிக்கி பாண்டிங்.

மேலும் திறமைகளை பற்றி பேசிய அவர் குறுகாயில் “இந்தியாவில் பல திறமையுள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் இறுகின்றனர், அவர்கள் அனைவரும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். நீங்கள் அவர்களுடைய உள்நாட்டு கிரிக்கெட் பாதிப்புகளை பார்த்தாலும் கூட உண்மையில் என்னால் ஆச்சரியப் படாமல் இருக்க முடியாவில்லை.

நான் அப்படி விபரங்களை பார்த்த வரையில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவருமே ஒரே மாதிரியாக திறமை படைத்த வீரரகள் தான். அவர்களினால் டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமல்லாமல் எல்லா வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக இன்னமும் சில வருடங்களில் விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன்.அதனை பார்க்க நான் ஆவலாகவும் இருக்கிறேன் என்று தெரிவித்தார் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்.

சர்பராஸ் கான் பற்றி ரிக்கி பாண்டிங் :

மேலும் திறமை இருந்தாலும் வெஸ்ட் இன்டஸ் அணியில் வாய்ப்பு கிடைக்காதசர்பராஸ் கான் பற்றி பேசிய ரிக்கி பாண்டடிங் கூறுகையில் “எனக்கு சர்பராஸ் கானை நினைத்தால் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. அவருடைய டெஸ்ட் கிரிக்கெட் சராசரி 80 என்ற சிறப்பான தரத்தில் இருந்தும் அவருக்கும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனை நான் கேள்விப்பட்டதும் இல்லை. இவரை தவிர தேர்வாளர்கள் மற்ற வீரர்களை தேர்வு செய்கிறார்கள்.

நான் மட்டும் நேரத்தை ஒரு சில ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தியிருந்தார் பிரித்திவ் ஷாவையும் இந்த லிஸ்டில் இடம்பிடிக்க வைத்திருப்பேன். எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது அவர் தேவையான விஷியங்களை செய்தால் மீண்டும் சிறப்பான பார்முக்கு வர முடியும் என்று. ஏனென்றால் திறமையை பொறுத்தவரையில் சந்தேகமே கிடையாது பிரித்திவ் ஷா நல்ல திறமை படைத்த பேட்ஸ்மேன் என்றார் ரிக்கி பாண்டிங்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை