வீடியோ : இந்திய அணிக்கு சரியான ஒரு பினிஷர் கிடைச்சுட்டாரு – 6,6,6 சூப்பர் ஓவரில் மாஸ் காட்டிய ரிங்கு சிங்.

இந்திய அணியானது 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை அயர்லாந்து அணியுடன் விளையாடி அதில் 2-0 என்ற கணக்கில் வெற்றியும் பெற்றது. இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற பெரிய வீரர்கள் கலந்து கொள்ளாத நிலையில் பும்ரா கேப்டனாக இருந்தார். மேலும் இந்த தொடரில் 2024 வரும் உலக கோப்பையை கருத்தி

By ·

இந்திய அணியானது 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை அயர்லாந்து அணியுடன் விளையாடி அதில் 2-0 என்ற கணக்கில் வெற்றியும் பெற்றது. இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற பெரிய வீரர்கள் கலந்து கொள்ளாத நிலையில் பும்ரா கேப்டனாக இருந்தார். மேலும் இந்த தொடரில் 2024 வரும் உலக கோப்பையை கருத்தில் கொண்டு பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது அவர்களில் ஒருவர் தான் ரிங்கு சிங்.

சாதாரண குடும்பத்தை சேர்ந்த ரிங்கு சிங் தன்னுடைய கடுமையான உழைப்பினால் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். மேலும் வளர வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. மேலும் இப்படியே வரும் போட்டிகளில் சிறப்பாக செய்யப்படும் நிலையில் வரும் 2024 உலக கோப்பை போட்டியிலும் வாய்ப்பு கிடைக்கும் என்றே சொல்லலாம். ஒரு கட்டத்தில் துடைக்கும் வேலைக்கு செல்ல இருந்த ரிங்கு சிங் அது வேண்டாம் என்று படிப்படியாக முன்னேறி இந்த நிலைமைக்கும் வந்திருக்கிறார்.

ஆனால் இருந்த போதிலும் வாய்ப்பு சிறிதளவே கிடைத்து வந்த நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்கள் அடுத்து சரித்திரம் படித்த ரிங்கு சிங்கி இன்னமும் யாராலும் மறக்க முடியாது. கடைசி கட்ட ஓவர்களில் அவரது அதிரடி மிகச் சிறப்பாக இருப்பதால் தொடர்ச்சியாக அவர் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று ரசிகர்களும் ஆதரவு தந்து வருகின்றனர். 

இந்த நிலைமையில் உத்திரபிரதேசத்தில் நடைபெற்று வரும் யூபி டி20 லீக் தொடரில் அவர் ஐபிஎல் தொடரில் நிகழ்த்திய அதே போன்ற ஒரு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார் ரிங்கு சிங். அதாவது நேற்று மீரட் மவ்ரிக்ஸ் மற்றும் காசி வாரியர்ஸ் ஆகிய அணிகள் ஒரு லீக் போட்டியில் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த மீரட் அணி 20 ஓவர்களில் 181/4 ரன்கள் அடித்தது. காசி அணியும் 181/7 எடுக்கவே போட்டியானது டிராவானது.

அதைத்தொடர்ந்து வெற்றியாளருக்கு தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் சிவம் பன்சல் 10 ரன்கள் எடுத்த உதவியுடன் காசி அணி 20 ஓவர்களில் 16/0 ரன்கள் எடுத்தது. இதனால் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றிருக்கும் போது காலத்தில் இருந்த ரிங்கு சிங் முதல் பந்தை தவற விட்டாலும் அடுத்த 3 பந்துகளில் ஆஃப் சைட் கவர்ஸ் மற்றும் லாங் ஆன் திசையில் அடுத்தடுத்த 3 ஹாட்ரிக் சிக்ஸர்களை தெறிக்க விட்டு சரியான ஒரு பினிஷிங் செய்தார்.

இதனால் அந்த அணியில் உள்ள வீரர் ஆரவாரமாக கூச்சலிட்டு இறுதியில் வெற்றியை பெற்றுக் கொடுத்த ரிங்கு சிங்கை தூக்கி கொண்டாடினார்கள். மேலும் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்த பலரும் ரிங்கு சிங்கை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரிங்கு சிங் ஆசிய கோப்பை போட்டியில் இல்லாத நிலையில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் இடம்பெற்றிருப்பதினால் பரபரப்பானது அதிகரித்துள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை