9th Fail, வீடுகளுக்கு சிலிண்டர் போடுபவரின் மகன், கிட் வாங்குவதற்கே பணமில்லாத ரிங்கு சிங் – ஐபிஎல் போட்டியில் சாதனை படைத்தது எப்படி.

கடந்த 1997ஆம் ஆண்டு ஆக்டோபர் 12ஆம் தேதி பிறந்த ரிங்கு சிங் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் தந்தை வீடுகளுக்கு சென்று கேஸ் சிலின்டர் போடுபவர். அவரது சகோதர் ரிக்க்ஷா ஓட்டுபவர். ரிங்கு சிங்கின் குடும்பம் 9 பேர் கொண்ட பெரிய குடும்பம் 2 அறைகள் மட்டுமே உள்ள கூரை வீட்டில் வசித்தன

By ·

கடந்த 1997ஆம் ஆண்டு ஆக்டோபர் 12ஆம் தேதி பிறந்த ரிங்கு சிங் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் தந்தை வீடுகளுக்கு சென்று கேஸ் சிலின்டர் போடுபவர். அவரது சகோதர் ரிக்க்ஷா ஓட்டுபவர். ரிங்கு சிங்கின் குடும்பம் 9 பேர் கொண்ட பெரிய குடும்பம் 2 அறைகள் மட்டுமே உள்ள கூரை வீட்டில் வசித்தனர். அவர் சிறுவயது முதலே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டதன் காரணமாக அவரால் அதில் கிடைத்த ஸ்காலர் ஷிப் மூலம் பள்ளியில் சேர முடிந்தது. ஆனால் படிப்பு வராததினால் ஒன்பதாம் வகுப்பிலேயே தோல்வியடைந்தார்.

அதற்கு பிறகு ரிங்குவின் குடும்பம் கடனால் மூழ்க பல பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது ரிங்குவின் குடும்பம். இதனால் குடும்பத்திற்கு உதவியாக வேலைக்கு போகவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது ஒரு முறை இவருடைய சகோதரர் துடைக்கும் வேலைக்கு அழைத்து சென்றிருக்கிறார். ஆனால் தனக்கு வேலை வேண்டும் ஆனால் துடைப்பதற்கு செல்ல வேண்டாம் என்று திரும்பி தன்னுடைய தாயிடம் கிரிக்கெட் போட்டிகளில் நான் கவனம் செலுத்துகிறேன் என்று கூற அவரது தாயும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் கிரிக்கெட் கிளப்புகளில் சேர்ந்து விளையாட தொடக்கிய சிங்கு சிங்கிற்க்கு சில நேரங்களில் கிட் வங்க கூட முடியாத நிலையில் அவரது பயிற்சியாளர் இவருக்கு உறுதுணையாக இருந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய திறமையை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்த ரிங்கு சிங் தன்னுடைய 16 வயதில் உத்தரபிரதேஷ்காக விளையாட ஆரம்பித்தார். அதற்கு பிறகுதான் இவருக்கு ஐபிஎல் போட்டியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு முதன் முறையாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 10 லட்சத்திற்கு ரிங்குவை விலைக்கு வாங்கியது. வறுமையான சூழ்நிலையில் அந்த 10 லட்சம் என்பது இவரது குடும்பத்திற்கு பெரிய உதவியாக இருந்துள்ளது. ஆனால் கேட்ட நேரம் எப்போது யாருக்கு வரும் என்று தெரியாத நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிநாட்டு போட்டிகளை ஆடினால் தடை செய்யப் படுவார்கள் என்று தெரியாமல் விளையாடியதினால் ரிங்கு சிங்கை பிசிசிஐ இவரை 3 மாதங்களுக்கு தடை செய்தது.

பின்னர் அதிலிருந்து மீண்ட இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது இவரது அப்பா 3 நாட்கள் சாப்பிடாமல் இருந்துள்ளார். ஏனென்ற்றால் தன்னுடைய மகன் குடும்பத்திற்காக உழைக்கிறான் என்று வருத்தப்பட்டுள்ளார். பின்னர் பல பிரச்சனைகளை தான்னடிய ரிங்கு சிங்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 80 லட்சத்திற்கு விலைக்கு வாங்கியுள்ளது. அது ஐபிஎல் போட்டியில் உள்ள தொடக்க விலையை விட 4 மடங்கு அதிகம்.

அப்படி பல கஷ்டங்களை கடந்து வந்த ரிங்கு சிங் தற்போது கொல்கத்தாவிற்காக விளையாடி வருகிறார். அப்படி ஒரு நிலையில் தான் ஐபிஎல் வரலாற்றில் எந்த ஒரு வீரரும் செய்ய, சொல்லப்போனால் கனவிலும் கூட நினைத்து பார்க்காத ஒரு விசியத்தை செய்துள்ளார். இன்று நடந்த KKR vs GT போட்டியில் கடைசி 8 பந்துகளில் 39 ரன்கள் தேவை பட்டது அனைவரும் போட்டி முடிந்து விட்டது என்றிருந்த நிலையில் ஒரு அதிசயம் நடந்தது.

கடைசி 7 பந்துகளில் 6,4,6,6,6,6,6 என விளாசி யாருமே எதிர்பார்க்க வண்ணம் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு சிறந்த “பைனல் ஓவர்” விளையாட்டை கொடுத்துள்ளார் ரிங்கு சிங். இவரது இந்த முயற்சிக்கு ரசிகர்கள் முதற்கொண்டு பல பிரபலங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஏழ்மையான கேஸ் சிலிண்டர் போடும் தந்தைக்கு மகனாக பிறந்த இவர் தற்போது ஐபிஎல் வரலாற்றிலேயே யாருமே செய்த ஒரு சாதனையை செய்துள்ளார் என்ற விஷயம் வைரலாகி வருகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை