ரிங்கு சிங்கால் IPL வரலாற்றின் மோசமான சாதனையில் இடம்பிடித்த குஜராத் பவுலர்.

ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோலாகலமாக துவங்கியது. இதுவரை 12 போட்டிகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் இந்த தொடரில் 13 வது போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் ம

By ·

ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோலாகலமாக துவங்கியது. இதுவரை 12 போட்டிகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் இந்த தொடரில் 13 வது போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில்களமிறங்கிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை எழுந்து 204 ரன்கள் குவித்து இருந்தது.

இதனை தொடர்ந்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி 28 ரன்களுக்கு எல்லாம் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் மற்றும் நித்திஷ் ரானா ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி வந்தனர். ஆனால், கொல்கத்தா அணி வெற்றியை நெருங்கும் வேலையில் அடுத்தடுத்து விகெட்டுகளை இழந்தது. இதனால் நிச்சயம் குஜராத் அணி வென்று விடும் என்று எதிர்பார்த்த நிலையில் கொல்கத்தா அணியில் களமிறங்கிய ரிங்கு சிங் கொல்கத்தா அணியின் ஆட்டத்தையே மாற்றினார்.

அதிலும் கடைசி ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 29 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை எதிர்கொண்டது கொல்கத்தா அணி. இதனால் கொல்கத்தா அணி நிச்சயம் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போட்டியின் கடைசி ஓவரில் வீசப்பட்ட கடைசி ஐந்து பந்துகளை தொடர்ச்சியாக சிக்ஸர்களை விளாசி கொல்கத்தா அணியை அபாரமான வெற்றிக்கு அழைத்துச் சென்றார் இளம் வீரரான ரிங்கு சிங்.

கொல்கத்தா அணியை தோல்வியில் இருந்து மீட்ட ரிங்கு சிங்கின் இந்த அபாரமான ஆட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதே வேளையில் அவருக்கு எதிராக அந்த கடைசி ஓவரை வீசிய குஜராத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள் களத்தில் கண்ணீர் விட்டு அழுதார். ஆனால், இதனையும் சேர்த்து சில மோசமான சாதனைகளுக்கும் சொந்தக்காரராக மாறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் யாஷ் தயாள் கடைசி ஓவரில் 31 ரன்கள் கொடுத்ததையும் சேர்த்து நேற்றைய போட்டியில் அவர் வீசி நான்கு ஓவர்களில் மொத்தம் 69 ரன்களை வாரி வழங்கி இருக்கிறார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த வீரர் என்ற பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார். அது மட்டுமல்லாது இறுதி ஓவரில் இவர் வீசிய 5 பந்துகளில் 5 சிக்ஸர்களை விளாசிய நிலையில் இறுதி ஓவரில் 5 சிக்ஸர்களை வழங்கிய பவுலர் என்ற பட்டியலிலும் இடம் பிடித்திருக்கிறார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை