நான் எவ்வளவு சொன்னாலும் என்னுடைய அப்பா சிலிண்டர் போடும் வேலையை விட மறுக்கிறார் – ரிங்கு சிங் உருக்கம்.
2023 ஐபிஎல் போட்டியின் போது முடியவே முடியாது என்று இருந்த நிலையில் எங்கேயோ தெரிந்த வெளிச்சம் போல திடீரென களத்தில் இறங்கி ரிங்கு செய்த மந்திரம் இன்னும் பல காலங்களுக்கு ரசிகர்கள் மனதில் இருந்து மறையாமல் இருக்கும். ஆனால் இப்படி பல சாதனைகளை படைத்த ரிங்கு சிங் சாதரண குடும்பத்தை சேர்ந்
2023 ஐபிஎல் போட்டியின் போது முடியவே முடியாது என்று இருந்த நிலையில் எங்கேயோ தெரிந்த வெளிச்சம் போல திடீரென களத்தில் இறங்கி ரிங்கு செய்த மந்திரம் இன்னும் பல காலங்களுக்கு ரசிகர்கள் மனதில் இருந்து மறையாமல் இருக்கும். ஆனால் இப்படி பல சாதனைகளை படைத்த ரிங்கு சிங் சாதரண குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் அப்பா கேஸ் சிலிண்டர் போடுபவர், சகோதரர் ஆட்டோ ஓட்டுபவர்.ஆனாலும் தன்னுடைய விடா முயற்சியாலும் தன்னபிக்கையினாலும் இந்த நிலைமைக்கு அவர் வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் துடைக்கும் வேலைக்கு செல்ல இருந்த ரிங்கு சிங் அது வேண்டாம் என்று படிப்படியாக முன்னேறி ஐபிஎல் போட்டிகளில் 20 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். சொல்லப்போனால் அதுதான் குறைந்த பட்ச விலை. இருந்தாலும் அந்த 20 லட்சத்திலிருந்து 80 லட்சத்திற்கு கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்ட அவர் 2022 ஆம் ஆண்டு மீண்டும் KKR அணியால் 55 லட்சத்திற்கு வங்கக்கப்பட்டார்.
அதனையடுத்து தொடர்ந்து தன்னுடைய திறமையை காட்டி வந்த ரிங்கு தற்போது பிறருக்கும் தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார். மேலும் அலிகாரில் அவர் ஏழை மாணவர்களுக்கான 50 லட்சம் ரூபாய் செலவில் தங்கும் விடுதி ஓன்று கட்டி கொடுக்க உள்ளார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் இவருக்கு வரும் அயார்லாந்து தொடரிலும், ஆசிய விளையாட்டு போட்டியலிலும் வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய தந்தை பற்றி பேசியிருக்கிறார்.
ரிங்கு சிங் உருக்கம் :
அவர் கூறுகையில் “என்னுடைய வேலை ரன்களை அடிப்பது, எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதை சரியாக பயன்படுத்தி கொண்டு சிறப்பாக செய்ய விரும்புகிறேன். நான் அதிகமாக யோசிக்க விரும்பவில்லை. நிகழ்காலத்தில் என்ன நடக்கிறது என்பது மட்டுமே கருத்தில் கொள்ள விரும்புகிறேன். நான் கடுமையாக உழைக்கிறேன், என்னை கடவுள் ஆதரிப்பார் என்று நம்புகிறேன். நான் இந்த அளவிற்கு வளர்ந்ததை பார்த்து என்னுடைய குடும்பம், சிறுவயது பாயிற்சியாளர் என அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
நான் என்னுடைய அப்பாவிடம் பல முறை சொல்லிவிட்டேன் நீங்கள் இப்போது ஓய்வெடுத்து கொள்ளலாம் என்று. ஆனால் அவர் தானுடைய சிலிண்டர் போடும் வேலையே விட மறுக்கிறார். அவருடைய வேலையே அவர் அதிகமாக விரும்புகிறார். பல ஆண்டு காலம் வேலை செய்து திடீரென ஓய்வு எடுத்தால் கண்டிப்பாக அவருக்கு போர் அடிக்கும். அவர் தான் வேலை செய்தது போதும் இனி நிறுத்திக்கொள்ளலாம் என்று அவராக நினைக்கும் வரையில் அவர் வேலை செய்வதை நிறுத்துவது கடினம் என்றார் ரிங்கு சிங்.
மேலும் பேசிய அவர் “என்னுடைய வாழ்கையில் நிறைய மாறிவிட்டது என்னால் பார்க்க முடிகிறது. நான் எப்போதும் என்னை பற்றி அதிகமாக எடுத்துக்கொள்ள மாட்டேன், ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் நம்பிக்கை அதீத நம்பிக்கையாக மாறும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவே சாதாரணமான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறேன் என்றார். மேலும் நிதிஸ் ராணாவிற்கும் kkr பயிர்த்தியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார் ரிங்கு சிங்