வீடியோ : சும்மா அதிருதுல்ல…மீண்டும் கிரிக்கெட்டில் களமிறங்கிய ரிஷப் பண்ட் – கொண்டாடும் ரசிகர்கள்.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் துவங்குகிறது. கடந்த 2011 உலககோப்பை போல இந்த முறையும் வென்று 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்தியா. ஆனா
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் துவங்குகிறது. கடந்த 2011 உலககோப்பை போல இந்த முறையும் வென்று 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்தியா. ஆனாலும் இந்தியாவில் அணியின் வீரர்களும் காயம் ஏற்படும் பிரச்னை என்பது மிகவும் மோசமான ஒன்றாக இருந்து வருகிறது.
குறிப்பாக இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் கருப்பு குதிரையாக இருந்து செயல்பட்டவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ரிஷப் பண்ட். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு கார் விபத்தில் பலமான காயங்கள் அடைந்து தற்போதுதான் உடலை தேற்றி மெதுவாக கிரிக்கெட்டில் பயிற்சி எடுத்து வருகிறார். ஆனாலும் வரும் உலக கோப்பை மற்றும் இந்தியா விளையாடும் சில சர்வதேச போட்டிகளில் ரிஷப் பண்டால் விளையாட முடியாது.
ஆனாலும் சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டிருந்த தகவலில் ரிஷப் பண்ட் கொஞ்சம் கொஞ்சமாக அவர் பழைய நிலைமைக்கு திரும்புவதாகவும். அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் வரும் பந்துகளை எதிர்கொண்டு விளையாடுவதாகவும் கூறியிருந்தது. இந்த தகவலில் இருந்து ரிஷப் பண்ட் தற்போது பேட்டிங் செய்யும் அளவிற்கு தேறிவிட்டார் என்பது சரியாக தெரிகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தான் காயம் ஏற்பாட்டு வெகுகாலம் கழித்து ரிஷப் பண்ட் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஓன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது நேற்று சுதந்திர தினத்தன்று உள்ளூர் கிரிக்கெட்டில் முதல் முறையாக ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வந்தார். மேலும் எப்போதும் போலவே அதிரடியாக பந்துகளை இறங்கி சென்று அதிபது, பந்துகளை தற்காப்பாக அடிப்பது என ரிஷப் பண்ட் தன்னுடை ரசிகர்களை மகிழ்வித்தார்.
Rishabh Pant is back on the ground, he is batting in a match on Independence Day – This video & visuals will bring happiness in everyone's face.
— CricketMAN2 (@ImTanujSingh) August 16, 2023
Video of the day! pic.twitter.com/PW0GnoCYCd
அது சம்மந்தனான வீடியோ பதிவு ஓன்று தற்போது சோசியல் மீடியாவில் பெருமளவு வைரலாகி வருகிறது. மேலும் ரிஷப் பண்ட் காயம் ஏற்பாடு எப்போது கிரிக்கெட் போட்டிக்கு திரும்புவார் என்றிருந்த நிலையில் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் வந்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் இவர் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வாக்கில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று சில தகவல்கள் சோசியல் மீடியாவில் பரவினாலும் அவை அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடையாது.