“நாளுக்கு நாள் என்னுடைய உடல்” – டெல்லி அணியை சந்தித்து பேசிய ரிஷப் பந்த் – வீடியோ உள்ளே.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இன்று அதிகாலை டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு சொகுசு காரில் பயணித்த அவர் கார் விபத

By ·

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இன்று அதிகாலை டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு சொகுசு காரில் பயணித்த அவர் கார் விபத்தில் சிக்கினார். அதிவேகத்தில் பயணித்த அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்பில் மோதி தீ பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் தலை முதுகு, கால் ஆகிய பகுதிகளில் காயமடைந்த ரிஷப் பண்ட் அங்கிருந்த பொதுமக்களின் உதவியின் மூலம் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது சிகிச்சை அளித்தார்கள். அதற்கு பிறகு தற்போது உடல் நலம் தேறி வருகிறார். ஆனாலும் கூட ஊன்றுகோல் இல்லாமல் அவரால் நடக்க முடியவில்லை. இதனால் அவர் தற்போது நடந்து வரும் ஐபிஎல் 2023 சீசனில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். அதுமட்டுமல்லாமல் ரிஷப் பந்த் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த நிலையில் அந்த பொறுப்பை ஏற்று டேவிட் வார்னர் டெல்லி அணியை வழிநடத்தி வருகிறார். இருந்த போதிலும் இந்த சீசனில் ஒரு முறை கூட வெற்றிபெற முடியவில்லை. இந்நிலையில் தான் சமீபத்தில் ரிஷப் பந்த் தன்னுடைய அணிக்கு ஆதரவளிக்க மைதானத்திற்கு வந்திருந்தார். அவர் வீடியோ அப்போது பெருமளவு வைரலானது.

இந்நிலையில் நேற்று தன்னுடைய டெல்லி அணியை சந்தித்த ரிஷப் பந்த் கூறுகையில் “என்னுடைய உடல் நாளுக்கு நாள் தேறி வருகிறது. உடலில் ஏற்பட்டுள்ள காயங்களில் இருந்தும் என்னுடைய உடல் மீண்டு வருகிறது. நான் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்திருந்தேன். அந்த நேரம் என்னுடைய டெல்லி அணியும் பெங்களூரு வந்திருந்தார்கள். எனவே அவர்களை சென்று சந்தித்தேன். அவர்களுடைய பயிற்சியை பார்த்தேன்.

டெல்லி அணியுடன் இருக்க விரும்பினேன் ஆனால் காயம் காரணமாக அந்த வாய்ப்பை நான் இழந்து விட்டேன். என்னுடைய எண்ணம் எல்லாம் டெல்லி கேப்பிடஸ் அணியின் மேல் தான் இருக்கிறது. வரும் போட்டிகளை எதிகொள்ள டெல்லி அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறினார். ரிஷப் பந்த காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி இருக்கிறார். அதோடு வரும் உலகக்கோப்பை, மற்றும் ஒரு நாள் தொடர்களை இருந்து ரிஷப் விலகி இருப்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை