எல்லா நாளும் உங்களுடையது இல்லை.. தோல்விக்கான காரணத்தை விளக்கிய ரிஷப் பண்ட்.
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று புள்ளிபட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணியும், ஆறாவது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும் மோதியது. இதில் முதலில் டாஸை வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது அனைவருக்கும் ஆச்சரியமா
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று புள்ளிபட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணியும், ஆறாவது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும் மோதியது. இதில் முதலில் டாஸை வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் கொல்கத்தா மைதானத்தில் டாஸை வென்றால் பலரும் பௌலிங்கயே தேர்வு செய்வது வழக்கம்.
இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் கொல்கத்தா அணியின் பௌலிங்கிற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆட்டமிழக்க முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை எடுத்தது. இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரராக கேப்டன் ரிஷபண்ட் 27 ரன்கள் மட்டுமே எடுக்க, கடைசியில் வந்த குல்தீப் யாதவ் மட்டுமே நிலையாக நின்று 26 பந்துகளில் 35 ரன்களை விளாசியிருந்தார்.
அவர் போட்டி முடிந்து பேசுகையில் :முதலில் பேட்டிங் செய்வது நல்ல தேர்வாக இருந்தது. ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் நன்றாக பேட் செய்யவில்லை, 150 என்பது விஷயங்கள் எப்படிப் போகிறது என்பதற்கு இணையாக இருந்தது. ஆனால் எங்கள் தவறுகளிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்கிறோம், ஒவ்வொரு நாளும் உங்களுடைய நாள் கிடையாது. ஒரு அணியாக நாங்கள் சென்று கொண்டிருந்த விதம் நன்றாக இருந்தது.
ஆனால் இந்த கேம்கள் டி20களில் வருகின்றன. 180-210 ரன்களை எடுத்தால் நல்ல ஸ்கோராக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். எங்களுடைய பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாதா காரணத்தினால் எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு தர்க்கத்து கொள்ள போதுமான ரன்களை கொடுக்கவில்லை என்றார் ரிஷப் பண்ட்.