சில விஷயங்களை கட்டுபடுத்த முடியாது…எங்களுக்கு இது எந்த கடினமான நாட்களில் ஓன்று – கேப்டன் ரிஷப் பண்ட் பேச்சு

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்ற வருகிறது. அதில் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல் அணியும் விசாகப்பட்டினம் மைதானத்தில் பல பரீட்சை செய்தது. அதில்

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்ற வருகிறது. அதில் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல் அணியும் விசாகப்பட்டினம் மைதானத்தில் பல பரீட்சை செய்தது. அதில் கொல்கத்தா அணிக்கு தான் சிறப்பான ஆட்டம் தான் முதல் இன்னிங்க்சில் அமைந்தது.ஆரம்பத்தில் இருட்ந்து கொல்கத்தா அணியின் வீரர்கள் வந்து அவர்களின் திறமையை நிரூபிக்கும் வகையில் சிக்ஸர் பவுண்டர்கள் என அடித்து டெல்லி கேப்டன் திணற வைத்திருந்தார்.

கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சால்ட் மற்றும் சுனில் நரைன் இணைந்து கொல்கத்தா அணிக்கு ஆரம்பம் முதல் இருந்து அவர்களது அதிரடி ஆட்டத்தை காண்பித்து ரன்களை மளமளவென குவித்து இருந்தனர். அதில் சால்ட் 12 பந்துகளில் 18 ரன்கள் அடித்திருந்தார் ஆனால் மற்றொரு பக்கம் சிறப்பாக விளையாடிகொண்டிருந்த சுனில் நரேன் வெறும் 39 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் ஏழு சிக்ஸர்கள் 85 ரன்கள் அடித்து டெல்லி டெல்லி அணியின் பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருந்தார்.

அங்கிரிஷ் ரகுவன்ஷி 54 ரன்கள் அடித்திருந்தார் அதன் பின் ரசல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்து கொல்கத்தா அணிக்கு பார்ட்னர்ஷிப்பை மேலும் உறுதி செய்தனர். அதில் ஐயர் 11 பந்துகள் 18 ரன்களை அடித்து வெளியேற அதன் பின்பு வந்த ரிங்கு சிங்குடன் ரசல் இணைந்து மேலும் கொல்கத்தா அணிக்கு ரன்களை குவித்து வந்தனர். ஆண்ட்ரே ரசல் பத்தொன்பது பந்துகளில் 41 ரன்கள் அடித்திருந்தனர். இதன் மூலம் கொல்கத்தா 20 அவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 272 ரன்களை குவித்து ஐபிஎல் வரலாற்றில் இதுவே இரண்டாவது மிகப்பெரிய ஸ்கோரை பதிவு செய்து இருந்தனர்.

டெல்லி அணியின் பந்து பந்து வீச்சாளர்களை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அனைத்து பந்துவீச்சாளர்களும் சுமாராகவே செயல்பட்டுனர். அதில் நோக்கியா மூன்று விக்கெட்டுகளையும் இஷான் சர்மா இரண்டு விக்கெட் கலையும் கலீல் அகமது மற்றும் மிட்செல் மார்ஷ் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். அதன் பின் பேட்டிங் செய்த டெல்லி அணி ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தது. இருப்பினும் டெல்லி அணி 16.6ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அதில் அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 55 ரன்களும்(4 பவுண்டரிகளும் 5 சிக்சர்களும்) 54 ஸ்டெப்ஸ் 54ரன்களில் வெளியேற மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். தோல்வி குறித்து கேப்டன் ரிஷப் பண்ட் கூருகையில், எங்கள் பந்துவீச்சாளர்கள் எல்லா இடங்களிலும் ரன்களை கொடுத்து விட்டனர்.இன்று அந்த கடினமான நாட்களில் இது ஒன்று. ஒரு பேட்டிங் யூனிட்டாக, நாங்கள் ஒரு அணியாக கடினமாக போராட விரும்பினோம். இலக்கை நோக்கிச் செல்லாமல் இருப்பதை விட ஒரு அணியாக ஆல் அவுட்டாவதையே நான் விரும்புகிறேன். இங்கே சத்தமாக இருந்தது என்று நினைக்கிறேன். அதே நேரத்தில், திரையில் டைமரைப் பார்க்க முடியவில்லை.

திரையில் ஏதோ பிரச்சனை. ஆனால் நீங்கள் கட்டுப்படுத்தக்கூடிய சில விஷயங்கள் உள்ளன, சில விஷயங்கள் உங்களால் முடியாது. இந்த போட்டியில் அக்சர் படேல் போன்ற ஸ்பின்னர்களைப் பயன்படுத்த விரும்பவில்லை. ஒரு தனிமனிதனாக சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். இந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு அடுத்த போட்டியில் பாசிட்டிவாக வர வேண்டும். ஒவ்வொரு நாளும் ரசிக்கிறேன் ஆனால் கிரிக்கெட்டுக்கு அதன் சொந்த ஏற்ற தாழ்வுகள் உண்டு என்றும் அவர் கூறி இருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை