இந்திய அணிக்கு ரிஸ்வான் சிம்மசொப்பனமாக இருப்பார். அவரை வீழ்த்த இந்திய அணி இதை தான் செய்ய வேண்டும்
ரிஸ்வான் விக்கெட்டை இந்திய அணி கட்டாயம் வீழ்த்த வேண்டும். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 அக்டோபர் ஐந்தாம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அதில் இன்று உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திய பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைத
ரிஸ்வான் விக்கெட்டை இந்திய அணி கட்டாயம் வீழ்த்த வேண்டும். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 அக்டோபர் ஐந்தாம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அதில் இன்று உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திய பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதவுள்ளது. இதற்காக இரண்டு அணிகளின் வீரர்களும் கடுமையான முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய பாகிஸ்தானங்களுக்கு எதிரான போட்டிகள் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் மேலும் இந்தியா அந்த வரலாற்று தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக விளையாடும் ஆனால் அதே சமயத்தில் பாகிஸ்தான் அந்த வரலாற்றை உடைப்பதற்காக கடுமையான முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த இரண்டு அணிகலும் உலகக் கோப்பை தொடரில் விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால் யார் வெற்றி பெறுவார்கள் என்று விவாதமும் தற்போது எழுந்துள்ளது.
வல்லுனர்களின் கருத்து:
இந்திய அணி பாகிஸ்தான் அணி விட சற்று பலமாக இருந்தாலும் முகமது ரிஸ்வான் விக்கெட்டை முயன்ற அளவு சீக்கிரம் அவரது விக்கெட்டை இந்திய அணி வீழ்த்த வேண்டும். ஏனென்றால் அவர் தனியாக நின்று ஆட்டத்தை மாற்றக்கூடிய திறமை வாய்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இவர் பாகிஸ்தான் அணியின் மெக்கட் கீப்பர் பாக்ஸ்மனாக இருந்தார். இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு மற்றும் ஆஸ்திரேலியா முன்னாள் ஷேன் வாட்சனை போலவும் பேட்டிங் ஸ்டைலில் முகமது ரிஸ்வான் கலக்கி வருகிறார்.
இவர்களைப் போல விளையாடும் வீரர்கள் அனைத்திலும் சிறந்தவர்களாக இருப்பார்கள் அதாவது வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற் பந்துவீச்சு என அனைத்தையும் எளிதாக எதிர்கொள்பவர்களாக இருப்பார்கள். இவர் டெஸ்ட் போட்டிகளில் ஆறாவது இடத்தில் டி – 2௦ கிரிக்கெட்டுகளில் நான்காவது இடத்தில களம் இறங்கி வருகிறார். இவர் நெதர்லாந்து அணியுடன் விளையாடிய பொழுதும் இலங்கை அணியுடன் விளையாடிய பொழுதும் தனது திறமையான பேட்டிங்கின் மூலம் வெற்றியை தேடி தந்தார்.
அவர் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் 199 ரன்களை குவித்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் கண்டிப்பாக இந்திய அணிக்கு அச்சுறுத்தலாகவே இருப்பார். முகமது ரிஸ்வான் குறித்து சரியாக வீரர்களை இந்திய அணி களம் இறங்கவில்லை என்றால் இன்று பாகிஸ்தான் அணி அகமதாபாத்தில் புதிய ஒரு சாதனையை படைக்கும் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியுள்ளார்கள்.