உலக கோப்பையை விடுங்க.. இந்தியா கிட்ட மட்டும் தோக்காதீங்க – ரமீஸ் ராஜா சொன்னதை நினைவு கூர்ந்த ரிஸ்வான்
கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக்
கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாக இருக்கிறது.
மேலும் உலக கோப்பையை பொறுத்தவரியில் எல்லா போட்டிகளிலும் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி கடந்த 2021ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியை தழுவியது. இந்நிலையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ரிஸ்வான் முன்னாள் பிசிபி தலைவர் ரமீஸ் ராஜா தங்களுடைய அணிக்கு சொன்னது குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது : உலகக் கோப்பையில் நாங்கள் இந்தியாவை வென்றதில்லை. ரமீஸ் ராஜா எங்களை சந்தித்து நீங்க இந்தியாவை வெல்ல வேண்டும் என்றார். அவர் முதன்முதலில் பிசிபி தலைவராக வந்தபோது உலகக் கோப்பைக்கு செல்ல நீண்ட நேரம் இருந்தது. அதனால் அப்போதிலிருந்தே அவர் இந்த எண்ணத்தை எங்களது அணியில் வளர்க்கத் தொடங்கினார். உலகக் கோப்பையை நெருங்க நெருங்க அவர், கோப்பையை வென்றாலும் வெற்றி பெறாவிட்டாலும் இந்தியாவிடம் தோற்றுவிடாதீர்கள் என்றார்.
மேலும் இந்தியாவை கடந்த 2021 ஆம் ஆண்டில் எதிர்கொண்டது குறித்து பேசிய அவர் கூறுகையில் : உலகக் கோப்பையில் விளையாடுவதும் பெரிய போட்டியாக இருந்தாலும் சரி எனக்கு இதுவே முதல் முறை. அதனால் நான் மிகவும் சாதாரணமாக உணர்கிறேன். இது வேறு எந்தப் போட்டியிலிருந்தும் வித்தியாசமாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் நாங்கள் வெற்றி பெற்றதும், நாங்கள் என்ன சாதித்தோம் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.
பாகிஸ்தானில் நான் எங்காவது ஷாப்பிங் சென்றால் மக்கள் பணம் வாங்க மாட்டார்கள். அவர்கள் எங்களிடமிருந்து பணம் வாங்கவில்லை, இந்தியாவை வீழ்த்தியதற்காக அவர்கள் அனைவரும் எங்களைப் பாராட்டியதால் நான் ஷாப்பிங்கிற்கு வெளியே செல்வதை நிறுத்தினேன். நாங்கள் இந்தியாவை வீழ்த்தி வெற்றியடைந்த்தக்காக அனைவரும் எங்களைப் பாராட்டினர். ஒருமுறை நான் ஒருவரின் அறைக்குச் சென்றபோது அந்த போட்டியை அவர் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தார்.
மேலும் அவர் அதை தினமும் பார்ப்பதாகச் சொன்னார்கள் என்று சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் முகமது ரிஸ்வான். இந்நிலையில் இந்த வருட உலக கோப்பை தொடர் தொடங்கியுள்ள நிலையில் இந்தியா அணி பாகிஸ்தான் அணியை வரும் 9ஆம் தேதி எதிர்க்கொள்ள இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.