கடந்த உலக கோப்பையோடு போயிருக்கணும்.. இப்ப இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் – மறைமுகமாக விமர்சித்த உத்தப்பா.
இந்தியாவில் பெரிதும் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் இறுதி கட்டத்தில் நாம் நெருங்கிவிட்ட நிலையில் இதற்கு பிறகு இந்தியா உலக கோப்பை டி 20 தொடரில் பாங்காகுபெற இருக்கிறது. கடந்த 10 வருடங்களாக எந்த சர்வதேச கோப்பைகளையும் வெல்லாத இந்திய அணி இந்த முறையாவது வெல்லும் என்று ரசிகர்களும் ஒட்டும
இந்தியாவில் பெரிதும் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் இறுதி கட்டத்தில் நாம் நெருங்கிவிட்ட நிலையில் இதற்கு பிறகு இந்தியா உலக கோப்பை டி 20 தொடரில் பாங்காகுபெற இருக்கிறது. கடந்த 10 வருடங்களாக எந்த சர்வதேச கோப்பைகளையும் வெல்லாத இந்திய அணி இந்த முறையாவது வெல்லும் என்று ரசிகர்களும் ஒட்டுமொத்த இந்தியாவும் இந்திய அணி கோப்பையை தகுவதற்கான நேரத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறது.
மேலும் இந்த உலக கோப்பை தொடரை பொறுத்தவரையில் இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் துவே போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் மூத்த வீரர்கள் இன்னமும் அணியில் இருந்து வருகின்றனர். மேலும் ஹர்திக் பாண்டியதான் இந்த உலக கோப்பை தொடரில் இந்தியாவை வழிநடத்துவார் என்றிருந்த நிலையில் அவருக்கு பதிலாக ரோஹித் சர்மாவே கேப்டனாக இருக்கிறார்.
ஆனால் இதற்கு முன்னர் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியவை விடுத்து மீண்டும் விராட் மட்டும் கேப்டனாக ரோஹித்தை பிசிசிஐ கொண்டுவந்தது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இதனால் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. இந்த நிலையில் தான் இது குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரரான ராபின் உத்தப்பா.
அவர் கூறியதாவது : நான் இதை சொல்வதற்காக பல விமர்சனங்களை சந்திப்பேன் என்று நினைக்கிறேன். ஆனாலும் நான் இதை கூறுகிறேன். முந்தைய உலகக் கோப்பைக்குப் பிறகு விராட் மற்றும், ரோஹித் போன்ற மூத்த வீரர்கள் நகர்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்த உலகக் கோப்பையில் இளைஞர்கள் விளையாடியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஐபிஎல் போட்டியில் உண்மையான திறனை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் இப்போது சிறப்பாக செயல்படும் நிறைய பேர், ஷுப்மான் கில் போன்றவர்கள் இருக்க வேண்டும்.
சுப்மண் கில் இப்போதே உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அவர் தனது சொந்த விளையாட்டில் பெற்ற திறன், விளையாட்டின் மீதுள்ள பசி மற்றும் அவர் சாதிக்க விரும்புவது மிகப்பெரியது. அதற்கெல்லாம் வாய்ப்பு இருக்க வேண்டும். எனவே இப்படிப்பட்ட வீரர்கள் உலகக் கோப்பை போன்ற மிக உயர்ந்த கட்டத்தில் வாய்ப்பைப் பெற வேண்டும் என்றார் உத்தப்பா.
டி20 உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணி :
ரோஹித் சர்மா , யஷஷ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ். ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல். அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
இருப்பு வீரர்கள்: சுப்மான் கில், ரிம்கு சிங், கலீல் அகமது, அவேஷ் கான்