கங்குலி – சச்சின் மாறி இந்த இரண்டு பேரும் எதிர்காலத்துல வருவாங்க – முன்னாள் வீரர் அதிரடி.
இந்திய அணியானது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் தற்போது இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் 1 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றவுள்ளது. இந்ந
இந்திய அணியானது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் தற்போது இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் 1 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் 3 வது போட்டியில் தொடக்க வீரர்கள் தடுமாறிய நிலையில் திலக் வர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் இருவதும் இணைத்து சிறப்பாக விளையாடினார்கள்.
இந்நிலையில் ப்ளோரிடாவில் இன்று நடந்து முக்கியமான 4வது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. ஏனெனென்றல் ஆடுகளமானது பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்டது. அதனால் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 178/8 ரன்களை விளாசியது. இதனையடுத்து 179 என்ற இலக்கை துரத்த களமிறங்கிய இந்திய அணிக்கு இந்த போட்டியில் வெற்றியடைந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் அந்த அழுத்திலும் தொடக்க வீரர்களுக்காக கமிறங்கிய யசஸ்வி ஜெய்ஸ்வால் – சுப்மன் கில் ஆகியோர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி விரைவாக ரன்களை சேர்த்தனர்.
கடந்த அறிமுகப்போட்டியில் விளையாடிய ஜெய்ஸ்வால் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் இம்முறை பந்துகளை அணைத்து புறமும் பறக்க விட்டார். மறுபுறம் கடந்த போட்டியில் சொதப்பிய சுப்மன் கில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக விளையாடினார். இந்த இளம் தொடக்க வீரர்கள் ஜோடி சேர்ந்து 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அவுட்டாகாமல் அடப்பிடித்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தது.
இப்படிப்பட்ட நிலையில் தான் இந்த போட்டியில் நிலையாக நின்று விளையாடிய சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய அணியின் வீரரான ராபின் உத்தப்பா. அவர் கூறுகையில் “இந்தியாவுக்கு விளையாடும் அனைவருமே சமமான திறமையைக் கொண்டுள்ளனர். ஆனால் கில் – ஜெய்ஸ்வால் ஆகியோர் பேட்டிங் செய்த விதம் அவர்கள் ஒருவருக்கொருவர் பேட்டிங் செய்தது போல் இருந்தது. இதை அவர்கள் தொடர்ந்து செய்யும் பட்சத்தில் வரும் வருடங்களில் இந்தியாவின் ஆபத்தான ஜோடியாக உருவெடுப்பார்கள்
குறிப்பாக அனலை பறக்க விடும் மகத்தான சச்சின் டெண்டுல்கர் – சௌரவ் கங்குலி ஓப்பனிங்கில் பேட்டிங் செய்வது போல் அவர்களால் ஏதாவது சாதிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். இருப்பினும் அதற்கு அவர்கள் இன்னும் சிலவற்றை கண்டறிய வேண்டும். அதை செய்தால் இந்த பேட்டிங் ஜோடி இந்தியாவுக்காக நிறைய சாதனைகளை படைப்பார்கள் என்றார் ராபின் உத்தப்பா.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோர் எதிரணிகளைப் பந்தாடி ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியாக உலக சாதனை படைத்து. அவர்களது வழியில் ரோஹித் சர்மா – ஷிகர் தவான் ஆகியோர் நவீன கிரிக்கெட்டில் மகத்தான இந்திய ஓப்பனிங் ஜோடியாக செயல்பட்டனர். ஆனால் அவர்களை தொடர்ந்து சேர்ந்த ராகுல் – ரோஹித் வலது கை ஜோடியாக இருந்ததால் நீண்ட காலம் அசத்த முடியவில்லை. இந்த நிலைமையில் தற்போது சுப்மன் கில் ரோஹித் சர்மா கூட்டணியானது அடுத்து வருகிறது.