இந்திய அணியில் 4வது இடத்திற்கு யார் சரியாக இருப்பார்? இளம் வீரருக்கு ராபின் உத்தப்பா ஆதரவு

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியானது பல தொடர் போட்டியில் விளையாடிது. இதில் இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது அற்பிதமான வெற்றியை டி20 தொடரில் பெற்றது. ஆனாலும் இந

By ·

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியானது பல தொடர் போட்டியில் விளையாடிது. இதில் இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது அற்பிதமான வெற்றியை டி20 தொடரில் பெற்றது. ஆனாலும் இந்தியா டி20 தொடரில் இளம் வீரர்களை வைத்து விளையாடியதால் இந்தியாவுக்கு இது பெரிய அவமானம் கிடையாது. இருந்த போதிலும் தோல்வி என்பது தோல்விதான்.

மேலும் இளம் வீரர்களை வைத்து இந்த தொடரில் சோதனை செய்த இந்தியாவிற்கு நல்ல சில தேர்வுகளும் கிடைத்துள்ளது. குறிப்பாக சூரியகுமார் யாதவ் தன்னுடைய பார்மிற்கு திரும்பியுள்ளார். மேலும் திலக் வர்மா சிறப்பாக விளையாடி வருகிறார். சொல்லப்போனால் திலக் வர்மா அறிமுக வீரர் போலவே ஆடவில்லை என்று தான் சொலல் வேண்டும்.

ஏனென்றால் இவர் விளையாடிய போட்டிகளில் இந்தியா சில நேரங்களில் விக்கெட்டுகளை இழந்து நிற்கும் போது பொருமையாக நின்று ரன்களை எடுத்தும். அதே நேரத்தில் ரன்கள் தேவைப்படும் போது அதிரடியாக விளையாடி ரன்களை குவிப்பதையும் நம்மால் இந்த தொடரில் காண முடிந்தது. மேலும் இவர் வரும் 2024 டி20 உலக கோப்பையில் வந்தாலும் கூட அது ஆச்சரியப்பட கூடிய ஒரு விஷயம் இல்லை. ஏனென்றால் அவ்வளவு திறமையை வெளிப்படுத்தியுள்ளார் திலக் வர்மா.

இந்த நிலையில் தான் திலக் வர்மா குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரரான ராபின் உத்தப்பா கூறுகையில் “நிச்சயமாக இந்தியாவின் தேர்வாளர்கள் திலக் வர்மா குறித்து விவாதிக்கப்பார்கள். ஏனென்றால் நீண்ட காலமாக அணிக்கு சேவை செய்யக்கூடிய ஒருவரை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்கள். அவர் தனது தோள்களில் ஒரு நல்ல நிலையான தலையைப் பெற்றிருப்பது போல் தெரிகிறது. மேலும் அவரிடம் நல்ல திறமை இருக்கிறது. அவர் பிரகாசமான பாதையில் செல்ல மிகச் சிறப்ப தன்னுடைய வேலையே சரியாக செய்கிறார்.

அவர் பொறுப்பாக இருக்கக்கூடிய ஒருவர் என்பது எங்களுக்குத் தெரியும். ஏனென்றால் இந்தியா இரண்டு விக்கெட்டுகளை இழந்த பிறகு அவர் சூரியகுமார் யாதவுடன் இணைத்து வாய்த்த பார்ட்னர்ஷிப்பை பார்த்தாலே தெரியும் அவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டதை . இது மிகவும் நன்றாக இருக்கிறது.மேலும் அவர் பேட்டிங்கில் மாட்டுமல்லாமல் பந்து கிடைத்த போதும் விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சி செய்தார்.

அந்த நேரம் அவருக்கு ஒரு விக்கெட் கிடைத்தது. அவர் அந்த கேட்சை எடுத்திருந்தால் அவருக்கு சர்வதேச போட்டியில் 2 விக்கெட்டுகள் கிடைத்திருக்கும். அதுமட்டுமல்லாமல் அவர் ஒரு இடது கை வீரர் என்பதை மனதில் வைத்து கொள்ள வேண்டும் என்கிறார் ராபின் உத்தப்பா.இவர் சொல்வதை போல கடந்த காலங்களில் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற இடது கை ஆல்ரவுண்டர்கள் சிறப்பாக செயல்பட்டு தேவையான நேரத்தில் ரன்களையும் விக்கெட்டுகளையும் எடுத்து கொடுத்தனர் என்பது குறிப்பிடதக்கது

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை