ரோஹித் ஷர்மா இதை செய்தால் தோனி மற்றும் கோலியை முந்திவிடலாம் – இர்பான் பதான் பேச்சு.

T20 உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி இடம் இறுதிப் போட்டியில் தோல்வி தோல்வியை தழுவிய நிலையில் அடுத்த வருடம் உலக்கோப்பை போட்டியில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்பில் இருக்கின்றது. இந்திய அணிக

By ·

T20 உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி இடம் இறுதிப் போட்டியில் தோல்வி தோல்வியை தழுவிய நிலையில் அடுத்த வருடம் உலக்கோப்பை போட்டியில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்பில் இருக்கின்றது.

இந்திய அணிக்கு கோப்பை என்பது கனவாகவே இருந்து வருகிறது. அடுத்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் கோப்பையில் வேண்டுமென்று இந்திய அணி முனைப்போடு இந்திய அணி விளையாட உள்ளது. ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி உலகக்கோப்பை பின் 5 தொடர்களை கொண்ட டி20 போட்டியில் 4-1 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா போன்ற பல்வேறு அணிகள் இந்த உலக கோப்பை போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறது.

அது மட்டுமல்லாமல் 2011 ஆம் ஆண்டு பிறகு அதிக அணிகளை கொண்ட உலக கோப்பை போட்டியாகவும் இது அமைய உள்ளது. அந்த அளவிற்கு உலகக் கோப்பை போட்டியில் 20 அணிகள் கலந்து கொள்ள தயாராகி உள்ளது. இந்திய அணி உலகக்கோப்பை டி20 போட்டிக்கு கடந்த வருடம் முதல் இருந்து தயாராகி வருகிறார்கள். அதற்கு முதற்கட்டமாக இந்திய அணி t20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக நியமித்தது. அதன் பின் அவர் டி20 போட்டியில் கேப்டனாக செயல்படவில்லை. தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் டெஸ்ட் தொடரில் மட்டும் தற்போது அவர் கேப்டனாக இருந்து வருகிறார். இது குறித்து முன்னாள் இந்திய வீரர் கருத்து கூறுகையில்,

“ரோஹித் சர்மா தென்னாப்பிரிக்காவை வெல்ல முடிந்தால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கேப்டன் மற்றும் வீரராக அவரது பெயர் முதலிடத்தில் இருக்கும், ஏனெனில் இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறுவதற்கான திறவுகோல் அவரிடம் மட்டுமே உள்ளது” என்று இர்பான் பதான் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கூறினார். ரோஹித் சர்மா தென்னாப்பிரிக்காவை வெல்ல முடிந்தால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கேப்டன் மற்றும் வீரராக அவரது பெயர் முதலிடத்தில் இருக்கும், ஏனெனில் இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறுவதற்கான திறவுகோல் அவரிடம் மட்டுமே உள்ளது.

அவர் ஒரு தொடக்க ஆட்டக்காரர் மற்றும் ஒரு கேப்டன். நீங்கள் புதிய பந்தை விளையாடினால், உங்கள் மற்ற பேட்டர்கள் பிரகாசிக்க வாய்ப்பு கிடைக்கும். அதனால்தான் புதிய பந்தில் இருந்து பளபளப்பை நீக்க வேண்டும், ”என்று அவர் மேலும் கூறினார். மேலும் அவர் கூறுகையில் “அவர் இங்கிலாந்து சென்றிருந்தபோது டெஸ்ட் தொடரில் முழுமையாக தயாராகி அற்புதமாக பேட்டிங் செய்தார். ரோஹித் சர்மா செல்வதற்கு முன்பு அதே ஆர்வத்துடன் தயாராகி வருவதை நீங்கள் பார்ப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

புதிய பந்தில் விளையாடி ரன்களை குவித்து அணியை முன்னோக்கி கொண்டு செல்வதே ரோஹித்தின் சவாலாக இருக்கும்” என்று பதான் கூறினார். “அவர் நிறைய தொப்பிகளை அணியப் போகிறார், உங்கள் அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர் மட்டுமே பல தொப்பிகளை அணிய முடியும்.” இடரும் அவர் கூறினார். இந்திய அணி இதற்க்கு முன்னதாக தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை