சதத்தை பூர்த்தி செய்யவில்லை என்றாலும் வீரர்களுடன் மகிழ்ச்சியாக இருந்த விராட் கோலி. இணையத்தில் பரவும் வீடியோ.
இந்திய அணியின் வெற்றிக்குப் பின் வீரர்களின் நெகிழ்ச்சியான தருணங்கள் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. அதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நியூசிலா
இந்திய அணியின் வெற்றிக்குப் பின் வீரர்களின் நெகிழ்ச்சியான தருணங்கள் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. அதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி மற்றும் இந்தியா அணிகள் நேற்று தர்மசாலாவில் மோதின. இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விளையாடுவதால் அவருக்கு பதிலாக சூரியகுமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் இதுவே அவரது முதல் உலககோப்பை போட்டியாகும்.
நியூசிலாந்து அணியின் சார்பாக அதிகபட்சமாக மிட்செல் ரன்களும் ரச்சின் ரவீந்திர 75 ரன்களும் பிலிப்ஸ் 23 ரன்களையும் குவித்தனர். நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் அதன் பின் சரியான பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்தனர். இந்திய பந்து வீச்சாளர்கள் போட்டியின் கடைசி கட்டங்களில் தான் போட்டிக்குள் வந்தனர். இந்திய அணியின் பௌலர்களில் அதிக பட்சமாக ஷமி 5 விக்கெட்டுகளையும் குல்தீப் 2 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் சிராஜ் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய அணிக்கு 274 ரன்களை இலக்காகக் நிர்ணயித்தது நியுசிலாந்து அணி.
275 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தாலும் அவ்வபோது விக்கெட்டுகளை இழந்து வந்தனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 95 ரன்களும் ரோஹித் ஷர்மா 46 ரன்களும் ஜடேஜா 35 ரன்களும் அடித்தனர். நியூசிலாந்து அணி சார்பில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளையும் சண்ட்னர் மற்றும் போல்ட் தலா ஒரு விக்கெட்டுகளையும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியது. இந்திய அணி இது வரை ஒரு தோல்வியை கூட தழுவவில்லை. கோலி சதத்தை இழந்தது இருந்தாலும் இந்திய அணி வெற்றி பெற்றது அனைவருக்கும் மகிழ்ச்சியே.
12வது ஓவரில் ரோஹித் வடிவில் இந்தியா தனது முதல் விக்கெட்டை இழந்தபோது கோலி பேட்டிங்கில் இறங்கினார். கோலி 104 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 95 ரன்கள் எடுத்ததன் மூலம் அவர் ஏன் சேஸ் மாஸ்டர் என்று புகழப்படுகிறார் என்பதையும் அவர் அதை வெளிப்படுத்தினார். இருப்பினும், கோலி சேசிங்கை முழுவதுமாக முடிக்க முடியவில்லை. மேலும் ரவீந்திர ஜடேஜா இந்தியாவுக்கான ஆட்டத்தை முடித்தார்.
நெகிழ்சியான தருணம்
இதற்கிடையில், மென் இன் ப்ளூ வெற்றிக்குப் பிறகு மகிழ்ச்சியடைந்தனர் மற்றும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஒருவரையொருவர் கட்டித்தழுவி மறக்கமுடியாத வெற்றியைக் கொண்டாடினர். இது இந்திய அணிக்கு கிடைத்த சிறப்பான வெற்றியாகும், மேலும் கோஹ்லி 5 ரன்கள் வித்தியாசத்தில் சதத்தை தவறவிட்டாலும், அணியின் வெற்றியை ஆக்ரோஷமாக கொண்டாடினார்.