“இந்திய அணியில் இந்த வீரர் இருக்கும் வரை இந்திய அணிக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் கவலை தேவை இல்லை” – இயான் மோர்கன்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மோர்கன் சமி குறித்து சில வற்றை பகிர்ந்துள்ளார். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் நடைபெற்று முடிவடையும் தருவாயில் இருக்கின்றது. இதில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இ
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மோர்கன் சமி குறித்து சில வற்றை பகிர்ந்துள்ளார். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் நடைபெற்று முடிவடையும் தருவாயில் இருக்கின்றது. இதில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரிட்சை செய்ய உள்ளது. இந்த போட்டியானது வரும் நவம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.
இந்திய அணி இந்த உலக கோப்பையில் இதுவரை ஒரு தோல்வியை கூட கண்டிராமல் பலம் வாய்ந்த அணியாகவும் மற்றொன்று பக்கம் ஆஸ்திரேலியா அணியும் இரு தோல்விகளை தழுவி இருந்தாலும் அதன் பின் வந்து அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று ஞாயிறு அன்று இந்தியாவை இறுதிப் போட்டியில் மோத உள்ளது. இந்திய அணி அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி எளிதாக 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடந்த தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா போட்டியில் ஆஸ்திரேலியா அணி தனது சிறப்பான பேட்டிங் மற்றும் பௌலிங் மூலம் தென் ஆப்பிரிக்கா அணியை மூன்று விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணி மீண்டும் ஒருமுறை அரை இறுதி சுற்றில் வந்து தோல்வியை தழுவி வெளியேறி உள்ளது. 31 வருடங்களாக தென்னாப்பிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை என்பதும் குறிப்பிடதக்கது. இந்திய அணியைப் பொறுத்த வரைக்கும் மூன்று துறைகளிலும் இந்திய அணி சிறப்பாகவே செயல்படுகிறது. அதாவது பவுலிங் பேட்டிங் மற்றும் பில்டிங் என மூன்று துறையில் சிறப்பாக செயல்படுகிறது. இந்திய அணிக்கு அதிக அளவில் ரன்கள் குவித்த பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் 700 ரன்களை கடந்து விட்டார் ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் 500 ரன்கள் அடித்திருக்கின்றார்கள்.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் குறித்து எப்போதும் ஒரு விமர்சனம் இருந்து கொண்டே தான் இருக்கின்றது ஆனால் அதனை இந்திய அணி இந்த உலக கோப்பை போட்டியில் நிறைவு செய்து உள்ளது. கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் மிடில் ஆர்டரில் இருவரும் இணைந்து அணிக்கு அற்புதமாக விளையாடி ரன்களை குவித்து இந்திய அணி வெற்றிக்கு ஒரு தூணாக இருக்கின்றார்கள். இந்த உலகக்கோப்பை தொடரிலும் ஒரு மிடில் ஆர்டரில் 500 ரன்கள் அடித்த வீரரும் ஷ்ரேயஸ் ஐயர் தான். அதே போல் ஷமி அரை இறுதிபோட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணியை சுருட்டி இருந்தார்.
இந்திய அணியின் பௌலிங் குறித்தும் இந்திய அணியின் பேட்டிங் குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் வீரர் இயன் மோர்க்கன் கூறுகையில் நான் பல ஆண்டுகளாக அவரை எதிர் கொண்டு விளையாடி வருகின்றேன் அவர் பந்துவீச்சு விதம் துல்லிய மிக அபாயகரமாக இருக்கும் அவர் தொடர்ச்சியாக இருக்கும். அவர் பந்தை சீம் மற்றும் காற்றில் நகரத்த அவர் கொண்டு கட்டுப்பாடு நம்ப முடியாது ஒன்று. ஒருநாள் கிரிக்கெட்டில் 7 விக்கெட் என்பது கேள்விபடாத ஒன்று. குறிப்பாக நாக் அவுட் போட்டிகளில் அழுத்தம் திகமாக இருக்கும். அந்த போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். திடீரென்று உள்ளே வந்து ஏழு கிரிக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார். ரோஹித் ஷர்மா சமி போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தது அந்த இந்திய அணிக்கு பலத்தை கொண்டு சேர்க்கிறது என்றும் அவர் கூறியிருந்தார்