இப்போதைக்கு T20 ரிடையர்ட்மென்ட் கிடையாது போலயே? சூசகமாக தெரிவித்த ரோஹித் சர்மா..என்ன சொன்னார் தெரியுமா?
இந்திய அணியில் மிகச்சிறந்த மேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தது வருபவர் ரோஹித் சர்மா. இவர் இந்திய அணிக்காக விளையாடி பல போட்டிகளில் வெற்றியும் பெற்று தந்திருக்கிறார். அதோடு இவரது அதிரடி ஆட்டதாலேயே இவருக்கு ஹிட்மேன் என்ற பட்ட பெயரும் இருக்கிறது. மேலும் கடந்த 2021ஆம் ஆண்டிற்கு பிறகு விர
இந்திய அணியில் மிகச்சிறந்த மேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தது வருபவர் ரோஹித் சர்மா. இவர் இந்திய அணிக்காக விளையாடி பல போட்டிகளில் வெற்றியும் பெற்று தந்திருக்கிறார். அதோடு இவரது அதிரடி ஆட்டதாலேயே இவருக்கு ஹிட்மேன் என்ற பட்ட பெயரும் இருக்கிறது. மேலும் கடந்த 2021ஆம் ஆண்டிற்கு பிறகு விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகி ரோஹித் ஷர்மா கேப்டனாகி மாறினார்.
அதற்கு பிறகு அவரது தலைமையில் இந்தியா அணியாது கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா செமி பைனல் வரையில் சென்று தோல்வியை தழுவியது. மேலும் அதற்கு பிறகு உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் இந்தியா பைனலில் தோல்வியை தழுவிய நிலையில் ரோஹித் சர்மா வரும் ஒருநாள் உலக கோப்பை பொடியோடு கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மேலும் தான் விளையாட போவாக சூசகமாக கூறியுள்ளார் ரோஹித் ஷர்மா..
அதாவது அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் “இங்கு வந்துள்ள தருணத்தை அதிகாரம் என்ஜாய் செய்ய போகிறேன். அமெரிக்கா வருவதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. ஏனென்றால் உலகக் கோப்பை வரப்போகிறது என்பது உங்களுக்குத் தெரியும். அடுத்த ஆண்டு 2024 ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை உலகின் இந்தப் பகுதியில் நடக்கவுள்ளது. எனவே எல்லோரும் உற்சாகமாக இருக்கிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாங்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறோம் என்றார் ரோஹித் சர்மா.
Captain Rohit Sharma said, " We've a T20I world cup coming in June 2024. It'll be pretty exciting and we're looking forward to it."
— Nisha (@NishaRo45_) August 6, 2023
There's a hope Rohit Sharma will decide to play next t20i world cup 🤞pic.twitter.com/1aYQRATlP4
அனைத்து வடிவங்களிலும் இந்திய அணிக்கு இன்றியமையாதவராக இருந்த ரோஹித், ஒருநாள் உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 ஐ தொடரில் ஓய்வளிக்கப்பட்டார். ரோஹித் இல்லாத நிலையில், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்திய அணியை வழிநடத்தி வருகிறார், குறிப்பாக குறுகிய வடிவங்களில். ரோஹித்துக்குப் பிறகு ஹர்திக் இந்தியாவின் அடுத்த ஒயிட்-பால் கேப்டனாக வருவார் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் குறுகிய வடிவத்தை விட்டுக்கொடுக்கும் திட்டம் இல்லை என்று ரோஹித் சொன்னதில் இருந்து தெரிகிறது மேலும் 2024 டி20 உலக கோப்பையில் விளையாடுவது குறித்து ரோஹித் சாமர் பேசியுள்ளதால் இன்னமும் சில ஆண்டுகளுக்கு இந்திய அணியில் இருப்பார் என்று தெளிவாக தெரிகிறது. இந்நிலையில் இந்த பேட்டியில் மேலும் பேசிய அவர் கூறுகையில் ” சில வீரர்களினால் எல்லா வடிவங்களையும் விளையாடுவது சாத்தியமில்லை.
நீங்கள் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அட்டவணையைப் பார்த்தால் ஒரு தொடர் முடிந்த பிறகு அடுத்த தொடரானது நடிப்பெறுகிறது. எனவே சில வீரர்களின் பணிச்சுமையை மட்டுமே பார்க்க முடிவு செய்தோம். அவர்களுக்கு போதுமான இடைவேளை நேரம் கிடைக்கிறதா என்பதை உறுதிசெய்ய விரும்புகிறோம். நான் நிச்சயமாக அதில் ஒருவராக வருவேன் என்று கூறினார் ரோஹித் சர்மா.