சுப்மன் கில் 99 சதவிகிதம் தயார் – IND vs PAK போட்டியை முன்னிட்டு அப்டேட் கொடுத்த ரோஹித் சர்மா.

உலக கோப்பை தொடரானது சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் 2வது போட்டியில் ஆப்கானிஸ்தானை எளிதாக தோற்கடித்து புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தானை முன்னேறி 2வது இடத்திற்கு முன்னே

By ·

உலக கோப்பை தொடரானது சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் 2வது போட்டியில் ஆப்கானிஸ்தானை எளிதாக தோற்கடித்து புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தானை முன்னேறி 2வது இடத்திற்கு முன்னேறியது. இந்த போட்டியை தொடர்ந்து நாளை நரேந்திர மோடி மைதானத்தில் வரும் 14ஆம் தேதி இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

அந்த போட்டியிலும் இந்தியா வெல்லும் என்ற பட்சத்தில் கடந்த 1992ஆம் ஆண்டில் இருந்து இதுவரை உலகக் கோப்பைகளில் பாகிஸ்தானிடம் தோற்காமல் இருந்து வரும் இந்தியாவின் கௌரவத்தை தற்போது உள்ள இந்திய அணி காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. அதே வேலையில் காய்ச்சல் காரணமாக இரண்டு போட்டிகளில் விளையாடாத சுப்மன் கில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் தான் இந்தியா நாளை பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் சுப்மன் கில் விளையாடுவாரா என்ற கேள்வி ரோஹித் சர்மாவிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறுகையில் “சுப்மன் கில் 90 சதவிகிதம் போட்டிக்கு தயாராக இருக்கிறார். நாம் அதை நாளை பார்க்க வாய்ப்பிருக்கிறது என்று கூறினார். இதனால் ரசிகர்கள் பலரும் சுப்மன் கில் குணமடைந்ததற்கு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

மேலும் பேசிய ரோஹித் சசர்மா கூறுகையில் ” நான் இன்னும் ஆடுகளத்தைப் பார்க்கவில்லை, ஆனால் நாங்கள் விளையாட விரும்பும் எந்த ஆடுகளத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒரு குழுவாக முன்னோக்கிச் செல்வது எங்களுக்கு சவாலாக உள்ளது. மாற்றங்கள் குறித்து அணியில் உள்ள வீரர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களுடன் எந்த பிரச்சனையும் இருக்காது என்று நினைக்கிறேன். நாங்கள் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட வேண்டிய அவசியம் இருந்தால், நாங்கள் மூன்று ஸ்பின்னர்களை விளையாடுவோம்.

மேலும் அஹமதாபாத் மைத்தனத்தில் உள்ள ஈரப்பதம் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த ரோஹித் சர்மா கூறுகையில் “உண்மையாக இது எவ்வளவு காரணியாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. டெல்லியில், பனி வரும் என எதிர்பார்த்தோம் ஆனால் வரவில்லை. சென்னையிலும் அனேகமாக 30 ஓவர்களுக்குப் பிறகுதான் வந்தது. எனவே நீங்கள் 75 சதவீத விளையாட்டை அப்போது முடித்திருப்பீர்கள்.

இது ஒரு பெரிய காரணியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அணி என்ன செய்ய வசதியாக இருக்கிறது என்பது பொறுத்து இது அமையும். முதலில் பந்துவீசி அழுத்தத்தை கொடுத்தாலும் சரி, அல்லது பேட்டிங் செய்து நல்ல ஸ்கொரை வைப்பதிலும் சரி நாங்கள் அதைச் சரியாக செய்ய முயற்சிக்கிறோம் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை