காயத்திலிருந்து மீண்டு வரும் அதிரடி வீரர் – ரோஹித் சர்மா கொடுத்த பெரிய அப்டேட்.

உலக கிரிக்கெட்டில் சிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்வது இந்தியா. ஏனென்றால் இந்திய அணியில் பல தலைசிறந்த வீரர்கள் வந்தது மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளையும் படைத்துள்ளனர். மேலும் கடந்த 20 வருடங்களில் இந்தியா உலக கிரிக்கெட்டில் மிகச்சிறந்த நாடாக இருந்த வந்தாலும் கடந்த 10

By ·

உலக கிரிக்கெட்டில் சிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்வது இந்தியா. ஏனென்றால் இந்திய அணியில் பல தலைசிறந்த வீரர்கள் வந்தது மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளையும் படைத்துள்ளனர். மேலும் கடந்த 20 வருடங்களில் இந்தியா உலக கிரிக்கெட்டில் மிகச்சிறந்த நாடாக இருந்த வந்தாலும் கடந்த 10 வருடமாக ஐசிசி நடத்தும் தொடர்களில் தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்களுக்கு மட்டுமல்ல இந்திய அணியின் வீரர்களுக்கே புரியாத புதிராக இருந்து வருகிறது.

மேலும் இது போதாதென்று வீரர்களுக்கு அவ்வவ்போது காயங்களும் ஏற்பட்டு விடுவதினால் இந்திய முக்கியமான நேரத்தில் சரியாக பந்துவீச்சாரகள் கிடைக்காமல் இந்தியா தடுமாறுகிறது. குறிப்பிடத்தக்க வகையில் கூற வேண்டும் என்றார் சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய அணியானது பெரும் தோல்வியை சந்தித்து. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக ஆர்க்கப்படுவது டெஸ்ட் விளையாடும் வீரர்களின் பற்றாக்குறை தான்.

ஏனென்றால் அந்த போட்டியில் கலந்து கொண்டிருக்க வேண்டிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், தொடக்க வீரர் கே.எல் ராகுல், 3ஆம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா என முக்கியமான வீரர்கள் இல்லாத காரணத்தினால் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் திணறியது நன்றாகவே தெரிந்தது. இந்நிலையில் காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த வீரர் குறித்து அறிவிப்பு ஒன்றிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.

அதாவது இந்திய அணியானது தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்த ஏற்கனவே நடந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெட்ரா நிலையில் சமீபத்தில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது.

இரண்டாவது போட்டி இன்று நடைபெற இருக்கிறது. ஆனால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு சில போட்டிகளில் ஓய்வு அறிவிக்கப்பட்ட நிலையில் ரோஹித் ஷர்மா வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு அருகே உள்ள அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் தன்னுடைய கிரிக்கெட் ஆகாடமியை தொடங்கியுள்ள ரோஹித் ஷர்மா அதனை துவக்கி வைக்கும் நிகழ்ட்சியில் கலந்து கொண்டார்.

அத போது அவர் சில விசியங்களையும் கூறினார். அதில் ஒன்டர் தான் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது. அது குறித்து பேசிய அவர் கூறுகையில் “ஸ்ரேயாஸ் ஐயர் மிகவும் சரியாக குணமடைந்து வருகிறார், மேலும் ஆவர் தன்னுடைய உடற்தகுதியில் கடுமையாக உழைத்து வருகிறார். எனவே அவர் மீண்டும் தன்னுடைய முழு உடற்தகுதியுடன் கிடைப்பார் என்றார் ரோஹித் ஷர்மா. ஏற்கனவே கே.எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயற் இருவருமே ஆசிய கோப்பையில் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்ற தகவல் வெளியான நிலையில் ரோஹித் சர்மா இப்படி கூறியது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை