ரோஹித் ஷர்மா முழு நம்பிக்கையையும் அவர் ஸ்விடச் ஆப் செய்துவிட்டார். விராட் கோலி இருந்து இருந்தால் நடந்து இருப்பதே வேறு – மைக்கல் வாகன்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்களில் இந்திய அணியை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் பின்தங்கிய நிலையில், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஆலி போப் சிறப்பான இன்னிங்ஸில் 196 ரன

By ·

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்களில் இந்திய அணியை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் பின்தங்கிய நிலையில், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஆலி போப் சிறப்பான இன்னிங்ஸில் 196 ரன்களுடன் இந்திய அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்து இருந்தார்.

இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் அவரது அந்த சிறப்பான பேட்டிங் தான். இந்திய அணிக்கு நான்காவது இன்னிங்சில் 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது, தொடக்க ஆட்டக்காரர் டாம் ஹார்ட்லி 7/62 எடுத்ததால் இந்திய அணியால் அந்த இலக்கை துரத்த முடியாமல் போனது. தொடரின் தொடக்க ஆட்டத்தில் சங்கடமான தோல்வியைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸின் போது பல நிபுணர்கள் அவரது கருத்துகளை கூறி வருகின்றனர்.

விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து தொடர்களில் இரண்டு போட்டிகளில் இருந்து அவர் விலகி உள்ளார். அவர் இல்லாத அதே முதல் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்றும் பலர் கூறி வருகின்றனர். விராட் கோலி அணியில் இருந்தாலே போதும் வீரர்களுக்கு எப்போதும் உற்சாகத்தை அளித்து இருப்பார் அது மட்டுமல்லாமல் அவரால் இந்திய அணியை வெற்றி பெறவைக்க முடியும் அளவிற்கு ரன்களை குவிக்க முடியும்.

அவர் கடந்த காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரராகவும் இந்திய அணியின் சிறந்த கேப்டனாகவும் இந்திய அணிக்காக அவர் இருந்துள்ளார். அது மட்டுமல்லாமல் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருப்பது இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் சற்று சுமாராகவே இருப்பதுதான். இதில் விராட் கோலி இல்லாததற்கு மேலும் இந்திய அணி பலம் இழக்க செய்துள்ளது. இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் சில கருத்துகளை கூறியிருந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி இந்திய அணி இல்லாதது இந்திய அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம். விராட் கோலி கேப்டனாக இருந்திருந்தால் அந்த போட்டியில் தோற்று இருக்காது. விராட் கோலி கேப்டனாக இருந்தபோது முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது கிடையாது. ரோகித் ஷர்மா சிறந்த வீரர் தான் ஆனால் அவர் அந்த போட்டியின் போது முழு நம்பிக்கையும் அவர் ஸ்விடச் ஆப் செய்து என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை