இங்கு நிறைய போட்டிகள் விளையாடி இருக்கிறேன்.. ஆனால் – வெற்றிக்கு பிறகு கேப்டன் கொடுத்த பேட்டி.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இந்தியாவில் நடைபெற்று லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று நாக் அவுட் எனப்படும் செமி பைனல் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டி
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இந்தியாவில் நடைபெற்று லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று நாக் அவுட் எனப்படும் செமி பைனல் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்டு 397 ரன்களை குவித்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியால் இந்த அழுத்தமான சூழ்நிலையை தாக்கு பிடிக்க முடியாமல் 48.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்களை மட்டுமே அடித்து ரன்கள் வித்தியசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றிக்கு பெரும் காரணமாக முகமது சமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மேலும் இந்திய அணி உலக கோப்பை இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் “நான் இந்த மைதானத்தில் நான் அதிக கிரிக்கெட் ஆடியுள்ளேன். இருந்த போதிலும் என்னால் அமைதியாக விளையாட முடியாது. ஏனென்றால் எவ்வளவு விரைவாக இந்த போட்டியை முடிக்க முடியுமோ அந்த அளவிற்கு விரைவாக இந்த போட்டியை முடிக்க விரும்பினேன். இந்த போட்டியில் நிச்சயம் எங்களுக்கு அழுத்தம் இருக்கும் என்பதால் எந்த இடத்திலும் நம்மால் ஓய்வாக இருக்க முடியாது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் கொடுத்த சில வாய்ப்புகளை நாங்கள் சொதப்பலான ஃபீல்டிங்கால் தவறவிட்டோம். இருந்த இது மாதிரியான விஷங்கள் போட்டிகளில் சகஜம் தான். இருந்தாலும் இறுதியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. நியூசிலாந்து வீரர்கள் எங்களுக்கு இந்த போட்டியில் நிறைய வாய்ப்புகளை வழங்கினார்கள். ஆனாலும் நாங்கள் அதனை தவற விட்டோம்.
நிச்சயம் இந்த வெற்றியை அப்படியே நாங்கள் தொடர்வோம். இங்கிலாந்து அணிக்கு எதிராக 230 ரன்களை அடித்த போதும் எங்களது பந்துவீச்சார்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தனர். அந்த வகையில் இந்த போட்டியின் போதும் அழுத்தத்தில் எங்களது வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை கொண்டு வருகின்றனர் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் ரோஹித் சர்மா.