விக்கெட் விழும் நேரத்தில் அவர் இல்லை – சென்னை அணியுடனான மும்பை அணியின் தோல்விக்கு பிறகு பேட்டி கொடுத்த ரோஹித் ஷர்மா.
உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் போட்டி தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் பல அணிகள் இருந்தாலும் அன்று முதல் இன்று வரையில் சென்னை vs மும்பை போட்டிக்கு ரசிகர்களின் கூட்டமும் ஆதரவும் மிகவும் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட இந்த இரு அணிகளுக்கு இடையேயா
உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் போட்டி தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் பல அணிகள் இருந்தாலும் அன்று முதல் இன்று வரையில் சென்னை vs மும்பை போட்டிக்கு ரசிகர்களின் கூட்டமும் ஆதரவும் மிகவும் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி எல் கிளாசிகோ என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சென்னை மைதானத்தில் 4 ஆண்டுகள் கடந்த இரு அணிகளுக்கும் எதிரான போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கத்திலே பெரிய அடியாக ரோஹித் ஷர்மா வெளியேறினார். அதற்க்கு பிறகு சூர்ய குமார் யாதவ் மற்றும் வதேரா இணைந்து வலுவான கூட்டணி அமைத்து 55 ரன்களை குவித்து வந்த நிலையில் சூர்யகுமார் 26 ரன்களில் ஜடேஜாவின் சுழலில் வெளியேறினார். மற்றொரு பக்கம் நிதானமாக விளையாடி வந்த வதேரா ரன்களை குவித்து அணிக்கு நம்பிக்கையை சேர்த்தது மட்டுமல்லாமல் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
அதன் பின் பதிரனா வீசிய பந்தலில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதற்கு பிறகு வந்த வீரர்களும் சரியாக ஆடாத நிலையில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவு 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்களை விளாசியது. 140 ரன்கள் எடுத்தால் என்று களமிறங்கிய சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினார்கள் இறுதியில் சென்னை அணி 14 பந்துகள் மீதம் இருந்த நிலையில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய ரோஹித் ஷர்மா தோல்விக்கான காரணம் குறித்து பேசினார்.
ரோஹித் ஷர்மா கூறியது :
அவர் கூறுகையில் “இந்த போட்டியில் என்ன நடந்தது என்று தெரியாவில்லை. எங்களுடைய வீரர்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை, பந்து வீச்சாளர்களுக்கு போதிய ரன்களை கொடுக்கவில்லை. எங்கள் பேட்டிங் பிரிவுக்கு இன்று மோசமான நாள். எங்களுக்கு எது சரியாக இருந்ததோ அதனை செய்தோம். திலக் வர்மா இல்லாத நேரத்தில் சுழலுக்கு எதிராக மிடில் ஓவரில் பேட் செய்ய ஒரு இந்திய வீரர் தேவைபட்டார் . ஆனால் 16 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்ததினால் எங்களினால் ரன்களை குவிக்க முடியவில்லை.
👉MSD comes up to the stumps 😎
— IndianPremierLeague (@IPL) May 6, 2023
👉Rohit Sharma attempts the lap shot
👉@imjadeja takes the catch 🙌
Watch how @ChennaiIPL plotted the dismissal of the #MI skipper 🎥🔽 #TATAIPL | #MIvCSK pic.twitter.com/fDq1ywGsy7
இந்த போட்டியில் பியூஷ் சாவ்லா மிகவும் சிறப்பாக பந்து வீசினர். அவருக்கு துணையாக மற்ற வீரர்களும் சரியாக பந்துவீசியிருக்க வேண்டும். அப்போது தான் ஒரு சிறந்த அணிக்கு தேவை. சொந்த மைதானம் வெளியூர் மைதானம் என்றெல்லாம் கிடையாது. அணைத்து அணிகளுமே அவர்களுடைய மைதானத்தில் வெற்றியும் வெற்றி தோல்வி இரண்டையும் பெற்றிருக்கின்றனர். அடுத்த சில போட்டிகளை எங்களுடைய மைதானத்தில் விளையாட இருக்கிறோம். அவை எப்படி செல்லும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறினார் ரோஹித் ஷர்மா.