போட்டியில் பெற்றிபெற காரணம் இவர்கள் தான் – வெற்றிக்கு பிறகு ரோஹித் ஷர்மா கொடுத்த பேட்டி.

ஐபிஎல் 2023 லீக்கில் 54 வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இதில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்க

By ·

ஐபிஎல் 2023 லீக்கில் 54 வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இதில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய பெங்களூரு அணியின் ஆரம்பம் சோதனையாகவே ஆரம்பிக்க கோலி 1 ரன்களில் வெளியேறினர்.

அதன் பிறகு கேப்டன் டு ப்ளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் இணைந்து அற்புதமாக இணைந்து விளையாடி 100  பார்ட்னர்ஷிப்பை பூர்த்தி செய்தனர் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது பெங்களூரு அணி.

200 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி ஆரம்பத்திலே அதிரடி பாணியை விட வில்லை. இருப்பினும் மற்றொரு பக்கம் அதிரடியாக விளையாடி வந்த இஷான் கிஷன் மற்றும் சூரிய குமார் யாதவ் என இருவரும் பெங்களூரு அணியின் பௌலிங்கை சிதறடித்து மும்பை அணி 16.3  ஓவர்களிலே எட்டி வெற்றி பெற்றனர். இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் மும்பை அணி புள்ளி பட்டியலில் 3 இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ரோஹித் ஷர்மா கூறியது :

மைதானம் பேட்டிங் செய்வதற்கு சிறப்பாக இருந்தது. நல்ல கிரிக்கெட் விளையாடினால் இந்த மைதானத்தில் ரன்கள் கிடைக்கும். எங்கள் அணியில் பேட்டிங் செய்த அனைவருமே மிகச் சிறப்பாக விளையாடினர். அதேபோன்று எங்கள் அணியில் உள்ள ஆகாஷ் மத்வாலிடம் தனி ஸ்கில்ஸ் இருப்பதை நாங்கள் கண்டுள்ளோம்.

எனவே அவருக்காக ஒரு ரோலை வழங்கி அவருக்கு நம்பிக்கை கொடுக்க நினைத்தோம். உத்தரகாண்ட் அணியின் கேப்டனான அவர் தற்போது முழுவதுமாக ஒரு அணியில் தன்னுடைய தனது அர்ப்பணிப்பையும் பங்களிப்பையும் உணர்ந்துவிட்டார். இந்த போட்டியில் 200 ரங்களுக்குள் நிறுத்தியது எங்களுடைய ஒரு நல்ல பவுலிங் என்று தான் கூறுவேன்.

ஏனெனில் 220 ரன்களுக்கு மேல் சென்று இருந்தால் இது சுலபமான போட்டியாக இருந்திருக்காது. அந்த வகையில் 200 ரன்களுக்குள் எங்களது பவுலர்கள் எதிரணியை நிறுத்தியது மிகச் சிறப்பான ஒன்று. அதோடு அணியின் பேட்ஸ்மேன்களும் சரியாக செயல்பட்டதே அணி வெற்றியடைய காரணம் என்று கூறினார் ரோஹித் ஷர்மா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை