நாங்கள் இதைத்தான் பல ஆண்டுகளாக செய்து வருகிறோம் – லக்னோவை வீழ்த்திய பிறகு ரோஹித் சர்மா கொடுத்த மாஸ் பேட்டி.

ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டே வருகிறது. அந்த வகையில் நேற்று எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்

By ·

ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டே வருகிறது. அந்த வகையில் நேற்று எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன் படி களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன் மற்றும் ரோஹித் ஷர்மா அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக ஆடவில்லை என்றாலும் அணியின் கூடு முயற்சியால் 20 வது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் 182 இழப்பிற்கு ரன்களை குவித்தது மும்பை அணி. இது கடந்த போட்டியில் சென்னை அடித்த ரன்களை விட அதிகம் என்பதினால் மும்பை அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்நிலையில் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்கம் சரியாக இருந்தாலும் 60 ரன்களுக்கு பிறகு ஆகாஷ் மத்வால் பந்துவீச்சிற்க்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சீட்டுக்கட்டுகளை போல சரிந்தனர். இறுதியில் 101 ரன்கள் மட்டுமே லக்னோ அணியால் எடுக்க முடிந்தது. இதன் முலம் மும்பை அணியும் சிறப்பான வெற்றியை பதிவு செய்து குவாலிபயர் 2க்கு முன்னேறியது.

ரோஹித் ஷர்மா :

இந்நிலையில் இந்த அற்புதமான வெற்றிக்கு பிறகு பேசிய ரோஹித் ஷர்மா கூறுகையில் “இதை தான் நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். இதனை நம்ப முடியவில்லை என்றாலும் அதனை நாங்கள் எப்படியோ செய்து விட்டோம். ஆகாஷ்கடந்த ஆண்டு ஒரு துணைப் பந்துவீச்சாளராக அணியின் ஒரு பகுதியாக இருந்தார். மேலும் ஜோஃப்ரா வெளியேறியவுடன், எங்களுடன் விளையாடுவதற்கான திறமையும் குணமும் அவரிடம் இருப்பது எனக்குத் தெரியும்.

பல ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வந்த வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடும் பலரைப் பார்த்திருக்கிறோம். அப்படிபட்ட இளைனர்களை ஊக்கப்படுத்துவதும், அவர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதும் என்னுடைய கடமை. அவர்கள் அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியம் அணியில் அவர்களுடய பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து தெளிவாக இருக்கிறார்கள்.

அதைத்தான் அனைவரும் விரும்புகிறீர்கள். ஒரு அணியாக நாங்கள் பீல்டிங் சிறப்பாக செய்தோம் என்று நினைக்கிறன். அனைவரும் களத்தில் பங்களிப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. சென்னைக்கு மைத்தனத்தில் நடக்கும் போட்டியில் அணியின் வீரர்கள் அனைவரும் சரியாக செயல்படவேண்டும் என்று எங்களுக்கு தெரியும். ஏனென்றால் வாங்கடே மைதானத்தில் ஒருவரால் வெற்றியை கொண்டு வர முடியாது. சென்னை மைதானம் முற்றிலும் மாறுபட்டது என்றார் ரோஹித் ஷர்மா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை