பாகிஸ்தானிடம் தரமான பௌலிங் இருக்கு… ஆனால் – ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் குறித்து ரோஹித் சர்மா கருத்து.
அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011ஆம் ஆண்டு கடைசியாக சொந்த மண்ணில் கோப்பையை வெ
அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011ஆம் ஆண்டு கடைசியாக சொந்த மண்ணில் கோப்பையை வென்றது போல் சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.
அதற்கு சாதகமாக பும்ரா, கேஎல் ராகுல் ஸ்ரேயாஸ் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதும் இந்திய அணியை பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.இந்த நிலைமையில் இத்தொடரில் இந்தியா வெற்றி காண்பதற்கு ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் அடங்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியான செயல்பாடுகளை வெளிப்படுத்துவது அவசியமாகிறது.
ஏனென்றால் வருகின்ற உலக கோப்பை தொடருக்கு அது கண்டிப்பாக பெரிய உதவியாக இருக்கும். அதோடு நாளை பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் இந்திய அணியினால் எவ்வித குறையும் இல்லாமல் செயல்பட முடியும். சொல்லப்போனால் பாகிஸ்தான் அணியானது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சமே இல்லாத அணி என்று கூறலாம். அதோடு உலகின் பல சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை பாஸ்கிதான் உருவாக்கி இருக்கிறது. இந்நிலையில் வரும் ஆசிய கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி குறித்து பேசியுள்ளார் இந்தியாவின் கேப்டன் ரோஹித் சர்மா.
அவர் கூறுகையில் “பாருங்கள் நாங்கள் பயிற்சி செய்யும் வலையில் எங்களுடன் ஷாஹீன், நசீம் அல்லது ரவுஃப் போன்றவர்களோ இல்லை. எங்களிடம் இருக்கும் பந்து வீச்சாளர்களுடன் தற்போது பயிற்சி செய்வோம். எங்களிடம் சில தரமான பந்துவீச்சாளர்கள் உள்ளனர், அனைவரும் சிறப்பாக செயல்பட்டு ஒன்றாக விளையாடுகிறார்கள். அணியில் இருக்கும் மூவரும் சிறப்பாக செயல்படுகிறார்கள்
இதில் முக்கியமாக கருத்தில் கொள்ளவேண்டியது என்னெவன்றால் பாகிஸ்தான் எப்போதும் தரமான பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் பல வருடங்களாக விளையாடி வருகிறோம், எனவே அவர்கள் எப்படி பந்து வீசுகிறார்கள், அவர்கள் வழக்கமாக எங்கே பந்து வீச விரும்புகிறார்கள் மற்றும் எல்லாவற்றையும் பற்றி எங்களுக்கு சில யோசனைகள் உள்ளன. எனவே இந்த போட்டியில் அந்த அனுபவத்தை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
பாகிஸ்தான் மிகச் சிறந்த அணி. டி20 உலகக் கோப்பை அல்லது 50 ஓவர் கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எந்த அணியும் நம்பர் 1 ஆக இல்லை, அதற்கு அதிக முயற்சி தேவைப்படும். நம்பர் 1 ஆவதற்கு பாகிஸ்தான் அணி கடுமையாக உழைத்திருப்பதாக நான் நம்புகிறேன். அவர்கள் ஒரு யூனிட் போல விளையாடுகிறார்கள், நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள், எனவே இது எங்களுக்கு சவாலாக இருக்கும் என்றார் ரோஹித் சர்மா.