“அம்பையரிடம் இதை தான் நான் சொன்னேன்” உண்மையை போட்டு உடைத்த ரோஹித் ஷர்மா.

அம்பையரிடம்அதற்காக தான் கையை மடக்கி காண்பித்தேன் என்று ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட

By ·

அம்பையரிடம்அதற்காக தான் கையை மடக்கி காண்பித்தேன் என்று ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இந்தியா விளையாடும் போட்டிகளை காண எதிராணிகளை விட இந்தியர்களே மைதானத்தில் அதிகம் கூடுகின்றனர்.

இதனால் இந்திய அணி நல்ல உற்சாகத்துடன் இந்த தொடரில் ஆடி வருகிறது. அதே போல் இந்திய விளையாடாத போட்டிகளில் கூட்டம் குறைவாக வருவதையும் காணலாம். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரின் 12வது லீக் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்று இருந்தது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. அதில் டாஸ் வென்று முதலில் அனல் பறக்க பந்து வீசிய இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 42.5 ஓவரில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது.

30.3 ஓவரிலேயே இந்த எளிய இலக்க எட்டிப்பிடித்து எளிதாக வென்ற இந்தியா உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து இந்திய ரசிகர்களை கொண்டாட வைத்தது.இந்த போட்டியை காண பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே அதிகம் மைதானத்தில் இருந்தனர். போட்டியில் நடந்த சுவாரஸ்யமானநிகழ்ச்சி குறித்து அவர் தற்போது பகிர்ந்துள்ளார்.

ரோஹித் ஷர்மா கூறியது:

போட்டு முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் ஏன் அம்பையரிடம் அது போன்று கையை மடக்கி காமித்தீர்கள் என்று கேள்வி கேட்டபோது அதற்கு ரோஹித் ஷர்மா கூறுகையில் நான் அந்த சிக்சர் அடித்தஉடன் நடுவர் என்னிடம் வந்து எப்படி அடித்தால் பேட்டில் ஏதாவது சக்தி ஏதாவது இருக்கின்றதா? என்று என்னிடம் கேட்டார்.

அதற்கு நான் சக்தி எல்லாம் கிடையாது சக்தி எல்லாம் என் கையில் தான் உள்ளது என்று எனது கையை மடக்கி அவருக்கு காண்பித்தேன் என்று ரோஹித் ஷர்மா கூறியிருந்தார். அன்றைய போட்டியில் ரோகித் சர்மா 63 பந்துகளில் 86 ரன்கள் குவித்திருந்தார். அதில் ஆறு பவுண்டரி மற்றும் ஆறு சிக்சர்கள் அடங்கும் இதுவே இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய அடித்தளமாக அமைந்தது

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை