என்னை சுற்றிலும் நல்லவர்கள்.. இது சும்மா கிடைக்கல பல ஆண்டுகால அனுபவம் – ரோஹித் சர்மா சிறப்பு பேச்சு.

உலக கோப்பை 2023 தொடரில் இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு தற்போது புள்ளி பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது. மேலும் அரையிறுதிக்கு கிட்டத்தட்ட இந்திய அணி சென்ற நிலையில் கேப்டன் ரோஹித்

By ·

உலக கோப்பை 2023 தொடரில் இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு தற்போது புள்ளி பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது. மேலும் அரையிறுதிக்கு கிட்டத்தட்ட இந்திய அணி சென்ற நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பு நேர்காணலில் பேசியுள்ளார். அந்த நேர்காணலின் போது அணி வீரர்களை நிர்வகிப்பது குறித்தும் அழுத்தத்தை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் பேசியுள்ளார்.

அவர் பேசுகையில் “வீரர்களை நிர்வகித்தல் என்று வரும்போது, முதலில் தனிநபரைப் புரிந்து கொண்டு அவர்களின் தேவைகள் மற்றும் அந்த குறிப்பிட்ட நபரின் விருப்பு வெறுப்புகள் என்ன என்பதை நீங்கள் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு. அது ஒன்று அல்லது இரண்டு நபர்கள் அல்லது சிலரைப் பற்றிய விளையாட்டு கிடையாது இது அனைவரையும் பற்றியது.

பெரிய போட்டிகளை வெல்ல விரும்பினால் அணியில் உள்ள அனைவரும் தங்களுயை பங்கை ஆற்ற வேண்டும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனவே அனைவரையும் நல்ல மனநிலையில் வைத்திருப்பது முக்கியம். அவர்கள் என்ன விரும்புகிறார்கள், அவர்கள் எவ்வாறு செயல்பட விரும்புகிறார்கள் போன்ற விஷயங்களைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம், பின்னர் நீங்கள் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு முன்னேறிச் செல்வதை தான் நான் செய்து வருகிறேன்.

நான் வீரர்களை பற்றி முடிந்த அளவு தெறித்து கொள்கிறேன். இந்த நபருக்கு இப்போது என்ன தேவை என்பதை பற்றி யோசிக்கிறேன். அப்படி நினைப்பது முக்கியம், அதிர்ஷ்டவசமாக, என்னைச் சுற்றி நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். வீரர்கள், துணை ஊழியர்கள் மற்றும் அனைவரின் தேவையின் அடிப்படையில் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.

எனக்கு இது இயல்பாக வரும் என்று நான் சொல்லமாட்டேன், பல ஆண்டுகளாக நான் அதைக் கற்றுக்கொண்டேன், எனது தனிப்பட்ட அனுபவங்களைக் வைத்து ஒரு அணியாக செயல்பட என்ன தேவை என்பதை கற்றுக்கொண்டேன். அவர்கள் விளையாடும் இடத்தை புரிந்து கொண்டு அவர்களுக்கான சுதந்திரத்தையும் வழங்குவதுதான் வெற்றிக்கு அவசியம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், அது சில சமயங்களில் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும்.

ஏனென்றால் நீங்கள் ஒரு முக்கியமான உயர்நிலை போட்டியில் விளையாடும்போது, ​​சில நேரங்களில் அழுத்தம் உங்களைத் தாக்கும். எனவே ஒரு அணியாக ஒன்றாக இருப்பது முக்கியம், ஒவ்வொருவரும் அந்த நல்ல சூழ்நிலையில் இருக்க வேண்டும். எனவே வெளியே என்ன சொல்கிறார்கள் என்பதை பற்றி கவலை படமால் அவர்கள் தைரியமாக விளையாடலாம் என்றார் ரோஹித். இந்நிலையில் இந்திய அணி வரும் 29ஆம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை