“அவர் இல்லாமல் பழகிவிட்டேன்” இனி அவர் வந்தாலும் கூட – பும்ரா பற்றி வெளிப்படையாக பேசிய ரோஹித் சர்மா.

இந்திய அணியானது பல போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளது. இதற்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சில மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தும், இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கியுள்ளது இந்தியா. இதன் மூலம் வருங்கால இந்திய கிரிக்கெட் அணியில்

By ·

இந்திய அணியானது பல போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளது. இதற்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சில மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தும், இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கியுள்ளது இந்தியா. இதன் மூலம் வருங்கால இந்திய கிரிக்கெட் அணியில் வீரர்களின் செயல்திறனை மேம்படுத்த முடியும் என்ற நோக்கில் செயல்பட்டுள்ளது. ஏனென்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல வீரர்கள் காயம் காரணமாக இந்திய அணியில் விளையாட வில்லை.

குறிப்பாக சிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நவீன இந்திய டெஸ்ட் அணியின் ஜாம்பவான்கள் பும்ரா, ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது. இதனிடையே தான் பும்ரா மீண்டும் இந்திய அணியில் இணைய வாய்ப்புகள் இருப்பதாகும் ஆசிய போட்டியில் அவர் விளையாட வைக்கப்படுவர் எனவும் கூறப்படுகிறது.

பும்ரா பற்றி ரோஹித் ஷர்மா :

இந்நிலையில் தான் பும்ரா பற்றி பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “கடந்த 8 மாதங்களாக பும்ரா இல்லை. இதனால் நான் அவரில்லாமல் அணியை வழிநடத்த பழகிவிட்டேன். எனவே மற்ற பந்துவீச்சாளர்களை வைத்து விளையாட்டில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துவது என்பது குறித்து யோசிக்கிறேன். நம்முடைய இந்திய நாட்டில் அதிக கிரிக்கெட் வீரர்கள் இருந்தாலும் அவர்கள் எளிதில் காயமடைந்து விடுகின்றனர். எனவே காயம் என்பது இங்கு மிகப்பெரிய ஒரு பிரச்சனையாக இருக்கிறது.

குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் எண்ணிக்கையில் பற்றாக்குறை இந்திய அணியில் இருக்கிறது. எனவே அவர்களை சரியாக நிர்வகித்து, அவர்களுக்கு தேவையான இடைவெளியையும் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களினால் மீண்டும் சரியாக செயல்பட முடியும். பும்ரா மீண்டும் அணிக்கு திரும்புவது என்னுடைய என்னம்மட்டுமல்லாமல் பலருடைய எண்ணமும் கூட. இருந்த போதிலும் அவருடைய உடற்தகுதியை மேம்படுத்தி அணிக்கு திரும்பும் வரையில் மற்ற வீரர்களை பயன்படுத்தி பார்க்க போகிறோம்.

அவர் காயம் சரியாகி வந்தால் உடனடியாக இந்திய அணியில் இணைவாரா? என்று சொல்ல முடியாது. நடத்தப்படும் பயிற்சி ஆட்டங்களில் அவரின் செயல்பாடு செயல்பாடு பொறுத்தே அடுத்த என்ன செய்யலாம் என்று முடிவெடுப்படும் என்றார். மேலும் வரும் உலக கோப்பை குறித்து பேசிய ரோஹித் ஷர்மா கூறுகையில் “மிகப்பெரிய போட்டியானது விரைவில் வர இருக்கிறது. எனவே அனைவருக்கும் சரியான இடைவெளி கொடுத்து அவர்களை உலக கோப்பைக்கு தயார் செய்ய வேண்டும்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு :

எங்களுடைய கவனம் முழுவதும் ஒரு தொடர் மீது மட்டுமே கிடையாது. புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் எங்களினால் எதிர்கால இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர்களை உருவாக்க முடியும். மேலும் இதன் மூலம் அவர்கள் எப்படி அழுத்தமான சூழ்நிலைகளை சமாளிக்கின்றனர் என்பதும் எங்களுக்கு இதன் மூலம் தெரியவரும் என்றார் ரோஹித் சர்மா. மேலும் ரோஹித் ஷர்மா ஜெய்ஸ்வால் இந்த தொடரில் இருக்கிறார் என்றும், சுப்மன் கில் ஓபன் செய்வதற்கு பதிலாக 3வதாக இறங்க விரும்புவதாகவும் ரோஹித் ஷர்மா தெரிவித்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை