ஐபிஎல்லில் மோசமான சாதனை படைத்த ரோஹித் ஷர்மா – என்ன சாதனை தெரியுமா?

ஐபிஎல் 2023 இன் 49வது போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே M. சிதம்பரத்தில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில், டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்த சென்னை கேப்டன் எம்எஸ் தோனி, மும்பை அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். முதலில் பேட்ட

By ·

ஐபிஎல் 2023 இன் 49வது போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே M. சிதம்பரத்தில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில், டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்த சென்னை கேப்டன் எம்எஸ் தோனி, மும்பை அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். முதலில் பேட்டிங் செய்ய வந்த மும்பை அணி மிக மோசமான தொடக்கமே கிடைத்து.

ஐபிஎல் 2023ல் முதல் முறையாக ரோஹித் சர்மா ஓப்பனிங் செய்வதற்கு பதிலாக மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார். ஆனால் ஆனால் மீண்டும் எந்த ரன்களும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார் ரோஹித் சர்மா. அதாவது இன்று சென்னைக்கு எதிரான எம்.சிதம்பரத்தில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவதாக களமிறங்கினார்.

அப்போது 2வது ஓவரில் தீபக் சஹர் பந்துவீச வந்தார். அப்போது 2வது ஓவரின் வது பந்தில் ரன் தூவும் எடுக்காமல 3 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் சர்மா 0 ரன்களில் வெளியேறி டக் அவுட்டுக்கு திரும்பினார். ரோஹித் ஷர்மா ரன் எடுக்காமல் ஆட்டமிழப்பது இது முதல் முறையல்ல, இதற்கு முன்பும் ஐபிஎல்லில் மொத்தம் 15 முறை ரன் எடுக்காமல் ஆட்டமிழந்த ரோஹித் ஷர்மா இன்று மீண்டும் 0 ரன்னில் அவுட்டாகி ஐபிஎல் வரலாற்றில் அதிக டக் ஆனவர் என்ற தேவையில்லாத சாதனையை படைத்துள்ளார்.

கேப்டனாக :

மேலும் ஒரு ஐபிஎல்லில் கேப்டனாக 11 முறை டக் அவுட்டானவர் என்ற மோசமான சாதனையை படித்துள்ளார் ரோஹித் ஷர்மா. போட்டியை பொறுத்தவரையில் முதலில் பேட்டிங் விளையாடிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் கிரீன் மற்றும் இஷான் கிஷன் சிறப்பான ஆட்டதை கொடுக்க நினைத்தனர், ஆனால் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர்க்கு பின்னரே இஷான் கிஷனும் 7 ரன்களில் வெளியேற, அணியின் கேப்டனும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார்.

அதற்க்கு பிறகு சூரிய குமார் யாதவ் மற்றும் வதேரா இணைந்து வலுவான கூட்டணி அமைத்து 55 ரன்களை குவித்து வந்த நிலையில் சூர்யகுமார் 26 ரன்களில் ஜடேஜாவின் சுழலில் வெளியேறினார். மற்றொரு பக்கம் நிதானமாக விளையாடி வந்த வதேரா ரன்களை குவித்து அணிக்கு நம்பிக்கையை சேர்த்தது மட்டுமல்லாமல் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இந்நிலையில் பொறுமையாக ஆடிவந்த நிஹாலை பதிரான ஆட்டமிழக்க செய்தார். இந்நிலையில் இந்த செய்தியை எழுதும் வரையில் 18.2 ஓவர்கள் முடிவில் 126 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை