ஒரே கேப்டன் இது போல் செய்யலாமா ? ரோஹித் ஷர்மாவை விமர்சிக்கும் நெட்டிசன்கள். இது தான் காரணமா?
உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர்.
உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இந்தியா விளையாடும் போட்டிகளை காண எதிராணிகளை விட இந்தியர்களே மைதானத்தில் அதிகம் கூடுகின்றனர்.
உலகக்கோப்பை ஆரம்பத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு எதிரான போட்டியை அகமதாபாத்தில் நடத்த வேண்டாம் வேறு ,மைதானத்தை மாற்றி அமைக்குமாறு கேட்டு கொண்ட நிலையில் ICC மற்றும் பிசிசிஐ அதை பற்றி ஏதும் அவர்கள் அதே மைதானத்தில் விளையாடும்படியும் கூறி இருந்தது. இன்று பூனே மைதானத்தில் பங்களாதேஷ் அணியை மோதுகிறது.
ரோஹித் சர்ச்சை:
இந்திய அணி இதற்கு முன்னதாக பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை எளிதாக வெற்றி பெற்று புள்ளி பட்டியல் முதல் இடத்தில் இருந்தது ஆனால் நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியல் முதல் இடத்திற்கு சென்றது. இன்று நடக்கவிருக்கும் போட்டியில் வென்றால் இந்திய அணி மீண்டும் புள்ளி பட்டியல் முதலில் சொல்லும். பூனேவில் நடைபெறவிருக்கும் இந்த போட்டிக்காக இந்தியாவை பதினாறாம் தேதி பூனேவிற்கு சென்றடைந்தது. மேலும் இந்தி 17ஆம் தேதியிலிருந்து வலைபயிற்சியை தொடங்கியது.
இந்நிலையில் நேற்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்த காரியம் தற்போது இணையத்தில் சர்ச்சையாகி உள்ளது. ஓய்வு நேரத்தில் அவருக்கு அந்த நேரத்தை குடும்பத்துடன் செலவிடாமல் அவர் மும்பையை நோக்கி அவரது காரில் சென்றுள்ளார் பின்னர் மீண்டும் பூனேவிற்கு அவர் காலையில் அதிவேகமாக சென்றுள்ளதால் அவருக்கு டிராபிக் காவல்துறையினர் மூன்று செல்லான்ங்களை வழங்கி உள்ளனர். அதாவது அவர் பூனேவிற்கு அவரது காரை அதிவேகமாக அதாவது 200 கிலோமீட்டர் வேகத்திற்கு சென்றதால் அவருக்கு மூன்று முறை டிராபிக் போலீஸ் சார் செல்லான்களை வழங்குகின்றனர்.
இது தற்போது இணையதளத்தில் சர்ச்சையான நிலையில் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். கேப்டன் என்றால் வெளியிலும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் இது போன்ற விதிமுறைகளில் ஈடுபடக்கூடாது என்றும் அவரவர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். அவர் சிறப்பாக பேட்டிங் செய்து அணியை சிறப்பாகும் வழிநடத்தி வருகிறார். இது போன்ற அதிவேகத்தில் சென்றதால் தான் ரிஷப் பந்தத்திற்கு விபத்து ஏற்பட்டு அவர் தற்போது அணியிடம் பெறாததற்கு வரும் காரணமாக அமைகிறது. கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ரோகித் சர்மா 63 பந்துகளை 86 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய அங்கமாக அமைந்தது.