இது எங்களுக்கு ஒரு நல்ல முன்னேற்றம் தான் – இந்திய அணி வீரர்களை பாராட்டிய ரோஹித் ஷர்மா.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இந்தியா பல போட்டிகள் கொண்ட தொடரை விளையாடுகிறது. அதில் முதல் போட்டியாக இந்திய 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் அற்புதமான வெற்றியை பெற்ற இந்தியா பின்னர் இரண்டாவது போட்டியிலும் மிகவும் சிறப்பாகவே செ

By ·

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இந்தியா பல போட்டிகள் கொண்ட தொடரை விளையாடுகிறது. அதில் முதல் போட்டியாக இந்திய 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் அற்புதமான வெற்றியை பெற்ற இந்தியா பின்னர் இரண்டாவது போட்டியிலும் மிகவும் சிறப்பாகவே செயல்பட்டது. முதல் போட்டியில் அஸ்வின் 12 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் சிராஜ் இரண்டவது போட்டியில் சிறப்பாக செயல்பாடு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் இந்தியா கிட்டத்தட்ட வெற்றி பெரும் நிலைக்கு வந்தது. ஆனால் மழை காரணமாக 2 போட்டியானது தடை பட்டது. மேலும் போட்டியின் 5 வது நாள் முழுவதுமாக தடை படத்தினால் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிந்தது. இதனால் இந்திய அணியானது 1- 0 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேசிய கற்பதின் ரோஹித் ஷர்மா பேட்ஸ்மேன்கள் பற்றியும் பந்துவீச்சாளர்கள் பற்றியும் பேசினார்.

ரோஹித் ஷர்மா பேட்டி :

ஒவ்வொரு வெற்றியும் வித்தியாசமானது. அதுவும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடுவது அதற்கே உரித்தான சில சவால்களை கொண்டிருக்கும். எங்களுக்கு இந்த போட்டி சென்ற விதம் பிடித்திருந்தது. நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் துரதிஷ்ட வசமாக எங்களினால் போட்டியை விளையாட முடியவில்லை. உண்மையில் நேற்று நல்ல மனநிலையுடன் போட்டிக்கு தயாராகினோம். ஆனால் மழை எங்களுக்கு தண்டங்களாக வந்தது.

கடைசி நாளில் பேட்டிங் செய்வது என்பது கடினம் என்பதினால் முதலில் நல்ல பெரிய டார்கெட்டை வைத்தோம். மைத்தனத்தில் எதுவும் இல்லை. விளையாடாதது எங்களுடைய துரதிஷ்டம். ஆனால் சிராஜ் எங்களுக்காக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது மிகவும் மகிழ்ச்சியான ஓன்று. அவர் நல்ல முன்னேற்றத்தை கண்டிருக்கிறார். நாங்கள் யாரும் தனிப்பட்ட முறையில் தாக்குதலை நடத்த விரும்பவில்லை. அவர்கள் கையில் பந்தை வைத்திருக்கும்போது சிறப்பாக வாழிடந்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

உங்களுக்கு இஷான் கிஷான் போன்ற பேட்ஸ்மேன்கள் கடிப்பாக தேவை. இரண்டாவது போட்டியில் நாங்கள் விரைவான ரன்களை எடுக்க விரும்பினோம். அதனால் இஷான் கிஷனை பேட்டிங் செய்யுமாறு சொன்னோம். நாங்கள் அவரை ஊக்குவித்தோம். அவரும் மிக சிறப்பாகவே செயல்பட்டார். மேலும் விராட் கோலி ஓன்று நிலையாக நின்று ரன்களை குவிக்கும் வீரர் உங்களுக்கு தேவை. அவர் மிகச்சிறப்பாக விளையாடினார்.

இந்த போட்டியில் எங்களுடைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டுமே கலவையாக இருந்தது. ஒரு அணியாக சிறப்பான பாதையில் செல்கிறோம் என்று நம்புகிறோன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் பிறகு நாங்கள் நிலையான கிரிக்கெட்டில் விளையாடியுள்ளோம். விளையாட்டின் மூன்று அம்சங்களான பீல்டிங், பேட்டிங் மற்றும் பௌலிங் என மூன்றிலும் நல்ல கவனம் செலுத்த விரும்புகிறறோம் என்றார் கேப்டன் ரோஹித் ஷர்மா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை