வீடியோ : Comeback கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர், விருத்திமான் சாஹா விக்கெட்டை வீழ்த்திய பிறகு ரோஹித் ரியாக்சன்.
ஐபிஎல் 2023 க்கான 35 லீக் போட்டியில் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை குஜராத் டைடன்ஸ் அணி எதிர்கொண்டது. கடந்த போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவி 7 வது இடத்தில் இருந்தும் குஜராத் அணி 4இடத்திலும் இருந்து வருகிறது, வெற்றி பெற
ஐபிஎல் 2023 க்கான 35 லீக் போட்டியில் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை குஜராத் டைடன்ஸ் அணி எதிர்கொண்டது. கடந்த போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவி 7 வது இடத்தில் இருந்தும் குஜராத் அணி 4இடத்திலும் இருந்து வருகிறது, வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இவ்விரு அணிகளும் உள்ளன.டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பௌலிங்கை தேர்வு செய்தார்.
M35: GT vs MI – Wriddhiman Saha Wicket https://t.co/nAvk5nxA6r
— INDIAN CRICKET (@FanOfIndianCric) April 25, 2023
அதன் படி முதலில் பேட்டிங் செய்ய வந்த குஜராத் அணியன் தொடக்க ஆட்டக்காரர்களாக கில் மற்றும் சாஹா களமேரங்கினார்கள். குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாஹா 4 ரன்களிலே அர்ஜுன் டெண்டுல்கரிடம் விக்கெட்டை இழந்தார். அதன் பிறகே அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்ய வந்தார், அவ்வபோது சிறப்பான ஷாட் களை அடித்து நன்றாக அணியின் ஸ்கோரை சேர்த்து வந்தனர்.
சாவ்லாவின் சுழல் பந்தில் மாற்றி விக்கெட்டை இழந்து வெளியேறினார் ஹர்திக் பாண்டியா. மறுபுறம் சிறப்பான பேட்டிங்கின் மூலம் தனது அரை சதத்தை பூர்த்தி செய்த நிலையில் கார்த்திகேயாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். விஜய் ஷங்கரும் தனது பங்கிற்கு அதிரடியை காட்டிய நிலையில் இவரும் சாவ்லாவின் சுழலிலே சிக்கினார்.அபினவ் மற்றும் மில்லர் ஜோடி சேர்ந்து 30 பந்துகளில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து அணிக்கு பலம் சேர்ந்தார். அபினவ் 21 பந்துகளில் 42 ரன்களை கடத்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
இதற்க்கு பின் வந்த திவாட்டியா முதல் பந்திலே இருந்து மும்பை அணியின் பௌலர்களை பந்தாடினார். டேவிட் மில்லரும் பந்துகளை பறக்க விட்டு அதிரடியை காட்டி வந்தனர். அற்புதமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில் அவர் விக்கெட்டை இழந்து வெளியேறினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 207 ரன்களை குவித்தது குஜராத் டைடன்ஸ் அணி.
இந்நிலையில் இந்த போட்டியில் 2ஓவரை அர்ஜுன்டென்டுல்கர் வீச வந்தார். இதன் போது தன்னுடைய முதல் பதிலே விருத்திமான் சாஹா விக்கெட்டை வீழ்த்தி மும்பை அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார். இதன் போது ரோஹித் சர்மாவும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த போட்டியில் அர்ஜுணடென்டுல்கர் மிகத் துல்லியமாக பந்துவீசி 2 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.