பென் டக்கெட் ரிஷப் பண்ட் ஆட்டத்த பார்த்து இருக்க மாட்டாரு போல – டக்கெட்டுக்கு பதிலடி கொடுத்த ரோஹித் ஷர்மா
ஜெய்ஸ்வால்எங்களை பார்த்து தான் அதிரடியாக விளையாட கற்றுக் கொண்டார் என கூறிய பென் டக்கேட்டுக்கு பதிலடி கொடுத்த ரோஹித் ஷர்மா. இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. அதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளத
ஜெய்ஸ்வால்எங்களை பார்த்து தான் அதிரடியாக விளையாட கற்றுக் கொண்டார் என கூறிய பென் டக்கேட்டுக்கு பதிலடி கொடுத்த ரோஹித் ஷர்மா. இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. அதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய கே.எல் ராகுல் காயம் காரணமாக அதன் பின் விலகினார். அதன் பின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எஸ். பரத் விளையாடினார். ஆனால் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை.
அதன் பின் மூன்றாம் மற்றும் நான்காம் போட்டிகளில் பரத்திற்கு பதிலாக ஜுரெல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டார். அவரது தனது சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 46 ரன்களும் 4வது போட்டி முதல் இன்னிங்சிலும் 90 ரன்களும் இரண்டாவது இன்னிங்க்ஸில் 39 ரன்களையும் அவர் அடித்து இருந்தார். அது மட்டும் அல்லாமல் அவர் விக்கெட் கீப்பிங்கும் சிறப்பாகவே செயல்பட்டு வந்தார்.
நாளை நடக்கும் இறுதிப் போட்டி குறித்து ரோஹித் ஷர்மா கூறுகையில்,எங்கள் அணியில் ரிஷப் பந்த் என்று ஒரு பையன் இருந்தான், ஒருவேளை பென் டக்கெட் அவன் விளையாடுவதைப் பார்த்திருக்க மாட்டான்” என்று பென் டக்கேட்டுக்கு ரோஹித் ஷர்மா பதிலடி அளித்து இருந்தார். பாஸ்பால் என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. யாரிடமிருந்தும் காட்டுத்தனமாக ஆடுவதை நான் பார்த்ததில்லை. கடந்த முறை இங்கு இருந்ததை விட இங்கிலாந்து சிறப்பாக விளையாடியுள்ளது.
ஆனால் பேஸ்பால் என்றால் என்னவென்று எனக்கு இன்னும் தெரியவில்லை. இது எங்களுக்கு தொடர்ச்சியான மறுபிரவேசங்கள். நாங்கள் அழுத்தத்திற்கு உள்ளான போதெல்லாம், எதிர் அணியினர் மீது அழுத்தத்தை மீண்டும் கொடுக்க முடிந்தது. அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு வழக்கமான இந்திய ஆடுகளம் போல் தெரிகிறது. வெப்பநிலை குறையும் போது சில அசைவுகள் இருக்கும், ஆனால் ஒரு நல்ல பிட்ச் போல் தெரிகிறது,” என்று ஷர்மா குறிப்பிட்டார், தொடரின் ஒரு சுவாரஸ்யமான முடிவுக்கு களம் அமைத்தார்.
ரிஷப் பண்ட் தனது டெஸ்ட் வாழ்க்கையில் இன்றுவரை 33 போட்டிகளில் விளையாடி 2,271 ரன்கள் எடுத்துள்ளார், சராசரியாக 44. ரிஷப் பந்த் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 246 பவுண்டரிகள் மற்றும் 55 சிக்ஸர்களை அடித்துள்ளார். அவருக்கு 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி எதிர்பாராத விதமாக ஒரு கார் விபத்து ஏற்பட்டது. அதன் பின் அவர் எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் ஐபிஎல் போட்டியிலும் விளையாடவில்லை. இந்த வருட ஐபிஎல்லில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.