<strong>அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கும் ரோஹித் ஷர்மா. அதற்க்கு இதுதான் காரணமா!</strong>
அர்ஜுன் டெண்டுல்கர், கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகன் தான் அர்ஜூன் டெண்டுல்கர். இதுவரை யாராலும் முறியடிக்க முடியாத கிரிக்கெட் களத்தில் இதுபோன்ற பல சாதனைகளை படைத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். அதே நேரத்தில், அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பற்றி ப
அர்ஜுன் டெண்டுல்கர், கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகன் தான் அர்ஜூன் டெண்டுல்கர். இதுவரை யாராலும் முறியடிக்க முடியாத கிரிக்கெட் களத்தில் இதுபோன்ற பல சாதனைகளை படைத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். அதே நேரத்தில், அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பற்றி பேச அவ்ளோ ஒன்றும் இல்லை என்ற சொல்லலாம். அர்ஜுன் பல ஆண்டுகளாக ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு அங்கமாக இருந்து வருகிறார். ஆனால் இது வரை அவருக்கு விளையாடும் XI இல் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
அவரின் தந்தை மிக பெரிய பேட்ஸ்ச்மனாகவும்,சிறந்த பௌலிங்கை கொண்டு விளையாடி வந்தார் .ஆனால், இவர் பௌலர் ஆக மட்டுமே விளையாடி கொண்டு வருகிறார் .அவரின் தந்தை சச்சின் டெண்டுல்கர் 16 வயதிலே இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இவ்வளவு பெரிய கிரிக்கெட் வீரரின் மகனுக்கு எந்த விலை கொடுத்தும் மும்பை அணியில் விளையாட வாய்ப்பு கொடுக்க மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தயாராக இல்லை.
அர்ஜுனை ஐபிஎல் வீரராக ரோஹித் சர்மா கருதவில்லை
அர்ஜுன் டெண்டுல்கரை ஏலத்தின் போது 30 லட்சம் ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால் இதுவரை அவர் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. உண்மையில், ரோஹித் ஷர்மா தான் அர்ஜுன் டெண்டுல்கரை விளையாடும் லெவன் அணியில் வாய்ப்பளிக்கவில்லை, ஏனெனில் ரோஹித் சர்மா தற்போது அவரை ஐபிஎல் அளவில் விளையாடும் வீரராக கருதவில்லை.
அர்ஜுன் டெண்டுல்கர் இதுவரை முதல் தர கிரிக்கெட்டில் மொத்தம் 7 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் 11 இன்னிங்ஸில் 3.42 எக்னாமியுடன் 12 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவர் லிஸ்ட்-ஏ இன் 7 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் 4.98 எக்னாமியுடன் 8 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இது தவிர, அர்ஜுன் டெண்டுல்கர் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் எந்த ஒரு சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தவில்லை. இதன் காரணமாக அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல்லில் இன்னும் திறமையாக இல்லை என்று மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கருதுகிறார்.