சர்வதேச போட்டியில் பந்து வீசாத காரணம் என்ன? ரோஹித் சர்மா கொடுத்த ஆச்சரிய பதில்.

அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011ஆம் ஆண்டு கடைசியாக சொந்த மண்ணில் கோப்பையை வெ

By ·

அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011ஆம் ஆண்டு கடைசியாக சொந்த மண்ணில் கோப்பையை வென்றது போல் சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.

அதற்கு சாதகமாக பும்ரா, கேஎல் ராகுல் ஸ்ரேயாஸ் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதும் இந்திய அணியை பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.இந்த நிலைமையில் இத்தொடரில் இந்தியா வெற்றி காண்பதற்கு ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் அடங்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியான செயல்பாடுகளை வெளிப்படுத்துவது அவசியமாகிறது.

மேலும் இந்திய அணியின் பவுலிங் தெரிந்த பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை என்றும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது கடந்த 2009-ஆம் ஆண்டு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ரோகித் தற்போதெல்லாம் பந்து வீசாமல் இருப்பதற்கு என்ன காரணம்? என்பது குறித்த ஓபனாக பேசியுள்ளார் ரோஹித் சர்மா.அவர் கொடுத்த பேட்டியில் கூறுகையில் நான் பந்து வீசும் போது எனது விரல்களில் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

அதன் காரணமாக எனது பேட்டிங் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே தான் பந்து வீசுவதில்லை என்று தெரிவித்துள்ளார்.மேலும் அவ்வப்போது நான் வலை பயிற்சியில் பந்துவீசினாலும் போட்டிகளின் போது பந்து வீசுவது கிடையாது என்று தெரிவித்துள்ளார். ஒருவேளை தொடர்ந்து பந்துவீசும் போது விரல்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு அதனால் எனது பேட்டிங் பாதிக்கப்பட்டுவிட கூடாது என்பதற்காகவே பந்துவீசுவதை கைவிட்டதாக ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 2 டெஸ்ட் விக்கெட், 8 ஒருநாள் விக்கெட் மற்றும் 1 டி20 என ரோகித் சர்மா 15 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். அதோடு ஐபிஎல்  தொடரிலும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 14 விக்கெட்டுகள் அவர் ஆரம்ப காலகட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடும் போது எடுக்கப்பட்டவை. அதன் பிறகு மும்பை அணியில் 13 சீசன்களில் 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலக கோப்பை தொடர்நது நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பது சாம்பியன் இங்கிலாந்து அணியுடன் நியூசிலாந்து அணி மோத இருக்கிறது. இந்த போட்டியை தொடர்ந்து வரும் 8ஆம் தேதி இந்திய அணியானது ஆஸ்திரேலியாவை நேருக்கு நேர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை