ரோஹித் ஷர்மாவிற்கு “ஹிட் மேன்” என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? அவரே சொன்ன ஆச்சரிய தகவல்.
இந்திய கிரிக்கெட் ரோஹித் சர்மா மிகவும் பிரபலமான மற்றும் மிகச்சிறந்த மேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தது வருபவர் ரோஹித் சர்மா. இவர் இந்திய அணிக்காக விளையாடி பல போட்டிகளில் வெற்றியும் பெற்று தந்திருக்கிறார். மேலும் இவருக்கு ஹிட்'மேன் என்ற பட்டபெயரும் இருக்கிறது. ஆனால் அது எப்படி வந்தத
இந்திய கிரிக்கெட் ரோஹித் சர்மா மிகவும் பிரபலமான மற்றும் மிகச்சிறந்த மேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தது வருபவர் ரோஹித் சர்மா. இவர் இந்திய அணிக்காக விளையாடி பல போட்டிகளில் வெற்றியும் பெற்று தந்திருக்கிறார். மேலும் இவருக்கு ஹிட்’மேன் என்ற பட்டபெயரும் இருக்கிறது. ஆனால் அது எப்படி வந்தது என்று பலருக்கும் தெரியாத நிலையில் ரோஹித் ஷர்மா ஹிட் மேன் என்ற பெயர் வந்ததற்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.
அதாவது ரோஹித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய நிலையில் வரும் ஆசிய போட்டியை கருத்தில் இவருக்கும் விராட் கோலிக்கும் தற்போது நடந்து வரும் இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் சில போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரோஹித் ஷர்மா தன்னுடைய ஓய்வு நேரத்தை கழித்து வரும் நிலையில் தான் அமெரிக்காவில் தன்னுடைய கிரிக்கெட் அகாடமி தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.
அந்த விழாவில் பேசிய ரோஹித் சர்மா பல விஷியங்களை பகிர்ந்து கொண்டார். அதில் ஒன்றுதான் தனக்கு எப்படி “ஹிட்மேன்” என்று பெயர் வருவதற்கான காரணம். பொதுவாக விராட் கோலியை கிங் கோலி என்றும், தோனியை தல என்றும், கங்குலியை தாதா என்றும் கூறும் ரசிகர்கள் ரோஹித் சர்மாவவை “ஹிட்மேன்’ என்று அன்போடு அழைப்பார்கள். ஆனால் அதற்கான அர்த்தம் பலருக்கும் தெரியாத நிலையில் தான் இந்த நிகழ்ச்சி மூலம் அதற்கு காரணத்தை கூறியுள்ளார் ரோஹித் சர்மா.
அவர் கூறுகையில் எனக்கு நியாபகம் இருக்கிறது கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியா vs ஆஸ்திரேலிய தொடரின் போது நான் என்னுடைய முதல் இரட்டை சதத்தை விளாசினேன். மேலும் அந்த போட்டியின் போது நான் 16 சிக்ஸர்களுடன் அந்த இரட்டை சதத்தை அடித்திருந்தேன். அப்போது போட்டி முடிந்து பேசும் போது ஒருவர் “நீங்க்ள் ஹிட் மேன்” என்று கூறினார். அதற்கு பிறகு ரவி சாஸ்திரியும் என்னை “ஹிட் மேன்” என்று அந்த போட்டியின் முடிவுரையில் கூறினார்.அதற்கு பிறகு அப்படியே அது தொற்றிக்கொண்டது என்றார் ரோஹித் சர்மா.
இந்நிலையில் அந்த மறக்கமுடியாத சம்பவதரிக்கு பிறகு ரோஹித் ஷர்மா ‘ஹிட்மேன்’ பட்ட பெயருடன் அனைவராலும் அழைக்கப்பட்டார். அதற்கு தகுந்தாற் போலவே ரோஹித் ஷர்மாவும் சிக்ஸர்களை விளாசுவதில் குறை காட்டியதே கிடையாது. அவருடை பேட்டிங் எந்த வகையான பந்துவீச்சாக இருந்தாலும் அதனை சுக்குநூறாக்கும் தன்மை கொண்டது. இருந்த போதிலும் தற்போதுள்ள சூழ்நிலையில் ரோஹித் சர்மா அந்த அதிரடியில் இருந்து கொஞ்ச மாறியிருக்கிறார் என்றே கூறலாம்
மேலும் அந்த பெட்டியில் பேசிய ரோஹித் சர்மா “இங்கு வந்துள்ள தருணத்தை அதிகாரம் என்ஜாய் செய்ய போகிறேன். அமெரிக்கா வருவதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. ஏனென்றால் உலகக் கோப்பை வரப்போகிறது என்பது உங்களுக்குத் தெரியும். அடுத்த ஆண்டு 2024 ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை உலகின் இந்தப் பகுதியில் நடக்கவுள்ளது. எனவே எல்லோரும் உற்சாகமாக இருக்கிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாங்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறோம் என்றார் ரோஹித் சர்மா. இதன் மூலம் அவர் அடுத்த டி20 உலக கோப்பையில் விளையாடுவார் என்பது தெளிவாக தெரிகிறது.