உலக கோப்பை 2011 : கஷ்டமான நேரத்தில் உதவிய யுவராஜ் சிங் – ரோஹித் உணர்ச்சிப்பூர்வமான தகவல்

தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் உலக கோப்பை 2023 போட்டியானது கோலாகலமாக துவங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தலை குனியும் தோல்விக்கு முடிவு கட்டுமா என்ற எ

By ·

தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் உலக கோப்பை 2023 போட்டியானது கோலாகலமாக துவங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தலை குனியும் தோல்விக்கு முடிவு கட்டுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆனால் முன்னதாக 2011ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறப்பாக செயல்பாடு அப்போது நடைபெற்ற உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தேர்வாகவில்லை.

சொல்லப்போனால் அந்த அணியில் தற்போது கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா பேக்-அப் வீரராக கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஏனெனில் ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் ரொம்பவே தடுமாற்றமாக செயல்பட்ட அவர் முதல் 4 வருடங்களில் 57 இன்னிங்ஸில் வெறும் 1248 ரன்களை 21 என்ற மோசமான சராசரியில் மட்டுமே எடுத்திருந்தார். அதன் காரணமாக மிடில் ஆடரில் விராட் கோலி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு சரித்திரம் படைத்ததற்கும் உதவினார்கள்.

ஆனால் அதற்கு பிறகு தன்னுடைய தவறுகளை சரிசெய்து கொண்டு விளையாடிய ரோஹித் சாரம் பின்னாளில் இந்திய அணியின் சிறந்த தொடக்க வீரராக உருவெடுத்தார். மேலும் இந்திய அணிக்கு கேப்டனாகவும் இந்தியாவை வரும் 2023 உலக கோப்பையில் வழிநடத்த இருக்கிறார். இது அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான தருணம் என்றே சொல்லலாம்.

இப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய அணியானது உலக கோப்பைக்கு முன்னர் ஆசிய கோப்பை போட்டியில் விளையாட இருக்கும் நிலையில் 2011 உலக கோப்பையின் போது தன்னை தேர்ந்தெடுக்காமல் இருந்தது குறித்தும், அதன் போது யுவராஜ் சிங் தனக்கு ஆறுதல் கூறியது குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ரோஹித் ஷர்மா கூறுகையில் “உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் நான் சோகமாக என் அறையில் அமர்ந்திருந்தேன், அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்போது யுவராஜ் சிங் என்னை அவரது அறைக்கு அழைத்து இரவு உணவிற்கு வெளியே அழைத்துச் சென்றது எனக்கு நினைவிருக்கிறது என்று ரோஹித் நினைவு கூர்ந்தார்.யுவராஜ் சிங் என்னக் கூறியபோது “நீங்கள் வெளியேறும்போது எப்படி உணர்கிறீர்கள் என்பதை அவர் எனக்கு விளக்கினார்.

அவர் என்னிடம் சொன்னார், நீங்கள் கிரிக்கெட் விளையாட இன்னமும் பல வருடங்கள் இருப்பதுதான் சிறந்த விஷயம். நாங்கள் உலகக் கோப்பையில் விளையாடும்போது நீங்கள் உங்களது ஆட்டத்திலும் திறமையிலும் கடினமாக உழைத்து மீண்டும் வருவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளுங்கள். நீங்கள் இந்தியாவுக்காக விளையாட மாட்டீர்கள் அல்லது உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பில்லை என்று எந்த விஷயமும் கிடையாது என்று யுவராஜ் சிங் சொன்னதாக கூறினார் ரோஹித் சர்மா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை