யுவராஜ் சிங் ஓய்விற்கு பின்னர் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவே இல்லை – ரோஹித் சர்மா கவலை.

உலக கோப்பை 2023 போட்டியானது தொடங்க இனமும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மிகவும் பிரமாதமாக நடந்து வருகிறது. மேலும் இந்த போட்டியில் வெற்றியடைந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறது. ஏனென்றால் இந்த உலக கோப்பை போட்டியானது முழுக்க முழுக்க இந்திய

By ·

உலக கோப்பை 2023 போட்டியானது தொடங்க இனமும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மிகவும் பிரமாதமாக நடந்து வருகிறது. மேலும் இந்த போட்டியில் வெற்றியடைந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறது. ஏனென்றால் இந்த உலக கோப்பை போட்டியானது முழுக்க முழுக்க இந்தியாவில் நடப்பதினால் இந்தியாவிற்கு சுலபமாக இருந்தாலும் அழுத்தம் என்பது மிகவும் அதிகமாகவே இருந்து வருகிறது.

இதனால் இந்திய அணி இந்த அழுத்தம் மிகுந்த போட்டிக்கு தங்களை தயார் படுத்த வருகிறது. மேலும் காயம் அடைந்த வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களையும் இந்தியா தேர்வு செய்ய ஆரம்பித்து விட்டது. சொல்லப்போனால் வரும் 4 மாதங்கள் இந்தியா பலவிதமான போட்டிங்களில் கலந்து கொள்ள இருக்கிறது. இதனால் வீரர்களின் பணிசுமையை தவிர்க்க சில வீரர்களுக்கு சில போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சமயத்தை பயன்படுத்தி அந்த இடத்தில் வீரர்களை இந்தியா பரிசோதனை செய்து வருகிறது. குறிப்பாக விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனையும், 4வது இடத்தில் திலக் வர்மாவையும் பரிசோதனை செய்கிறது. இருந்த போதிலும் அவர் இளம் வீரராக இருப்பதினால் உலக கோப்பை போன்ற பெரிய போட்டியில் விளையாட அனுபவம் தேவை. அப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்த பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் “4வது பேட்டிங் இடத்திற்கான பிரச்சனை நீண்ட காலமாக நிலவுகிறது. குறிப்பாக யுவராஜ் சிங் ஓய்வு பெற்ற பின் அந்த இடத்திற்கு வந்த யாருமே சரியாக பொருந்தவில்லை. பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் அந்த இடத்தில் வாய்ப்பு பெற்று சிறப்பாக செயல்பட்டார். அவருடைய புள்ளிவிவரங்களும் சிறப்பாக இருக்கின்றன. ஆனால் துரதிஷ்டவசமாக அவருக்கு ஏற்பட்ட காயமத்தினால் அவரினால் விளையாட முடியவில்லை.

அதனால் அவர் கடந்த 4 – 5 வருடங்களாக வெளியே அதிக நேரம் இருக்கும் நிலைமையே நீடித்து வருகிறது. ஏனெனில் அவரைப் போன்ற வீரர்கள் காயமடைந்து வெளியேறும் போது அங்கே புதிய வீரர்கள் வாய்ப்பு பெற்று விளையாடுகின்றனர். மேலும் கடந்த 4 – 5 வருடங்களில் இந்திய அணியில் நிகழ்ந்த காயங்கள் அதிகமாக இருக்கிறது. அப்படி நடக்கும் போது அவர்களுக்கு பதிலாக சில புதிய வீரர்களை சோதிக்க வேண்டியதுயுள்ளது.

அது தான் 4வது இடத்தில் ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது என்று நான் சொல்ல வருகிறேன். மேலும் நான் கேப்டனாக இல்லாத போதும் இது போன்ற விஷயங்கள் நடந்திருக்கிறது. பின்னர் உள்ளே வந்தவர்களும் வெளியே போனவர்களும் நிறைய பேர் இருந்தார்கள். அவர்ளுக்கு ஏற்பட்ட காயங்கள் அவர்களை விளையாடுவதில் இருந்து விலக்கி வைத்தன அல்லது அவர்கள் விளையாடவில்லை அல்லது காலம் போக தங்களுடைய ஃபார்மை இழந்தார்கள்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை