ரோஹித் ஷர்மா அதை செய்து இருக்க கூடாது. ஆடுகளம் ரன்களை எடுக்க கடினமாக இருந்தது – சேவாக்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 தற்போது இந்தியாவில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி போட்டியுடன் முடிவடைகிறது. நேற்று உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் நரேந்திர மோடி மைதானத்த
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 தற்போது இந்தியாவில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி போட்டியுடன் முடிவடைகிறது. நேற்று உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடியது . இந்திய அணி லீக் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று பலம் வாய்ந்த அணியாக நேற்று ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடியது . ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியை தழுவி இருந்தாலும் அதன் பின் நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றியை பதித்து நேற்று இந்திய அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பௌலிங் செய்வதாக தேர்வு செய்தார்.
இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி விளையாடியது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை மட்டுமே குவித்து இருந்தது. இந்திய அணியின் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 66 ரன்களும் விராட் கோலி 54 ரன்களுக்கும் ரோஹித் ஷர்மா 47 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணியின் பேட்டிங் சுமாராகவே இருந்தது. இந்திய அணி இறுதிப் போட்டியில் இது போன்று சொதப்பியது இந்திய ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வூட் தலா 2 விக்கெட்டுகளையும் மேக்ஸ்வெல் மற்றும் ஜாம்பா தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.
241 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் சிறிய தடுமாற்றம் இருந்தாலும் அதன் பின் ட்ராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி இந்திய அணியை எளிதாக இறுதிப் போட்டியில் வென்றனர். ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 241 ரன்களை குவித்து வெற்றி பெற்றனர். ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 137 ரன்களும் மார்னஸ் லாபுசாக்னே58 ரன்களும் மார்ஷ் 15 ரன்களையும் அடித்து ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி எளிதாக வெற்றி பெற்றது.இந்திய அணி சார்பில் பும்ரா 2 விக்கெட்டுகளையும் ஷமி 2 ஒரு விக்கெட்டையும் மட்டுமே வீழ்த்தி இருந்தன. எனவே ஆஸ்திரேலியா அணி 6 முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி பலம் வாய்ந்த அணியாக இருக்கின்றது. இந்திய அணி லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது.
இந்தியாவின் தோல்வி குறித்து சேவாக் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். ரோஹித் சர்மா சில ஷாட்டுகளை சிக்ஸர் பௌண்டரிகளை அடித்த பின்பு அவர் சற்று நிதானமாக விளையாடியிருக்கலாம் என்று பயிற்சியாளர்கள் அவரிடம் கூறுவார்கள். ஆனால் ரோகித் சர்மா பவர் பிளேயின் மேக்ஸ்வேலின் கடைசி ஓவர் சுலபமாக விட்டு வெளியே விரும்பவில்லை. ரோகித் சர்மா தொடர்ச்சியாக மேக்ஸ்வேலை அடித்து விளையாட முயற்சி செய்தார். ஆனால் அது ஒரு மோசமான ஷார்ட் மீண்டும் ஒரு வாய்ப்பு அப்படி கிடைக்கும் என்றால் அது நடக்காது. சூழ்நிலைகள் வேறு மாதிரி இருக்கின்றது ஆனால் ரோகித் சர்மா ஆட்டமிழந்து இருந்து இருந்தாலும் அந்த விக்கெட் மாதிரியான விக்கெட்டாக தெரிந்தது யாராலும் அங்கு சாட் அடிக்க முடியவில்லை. மேலும் இந்திய அணியும் பேட்மின்களால் ஸ்ட்ரைக்கை ஒரு ரோடெட் கூட செய்ய முடியவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.