இந்த மாதிரி இருந்தால் இந்தியா வெற்றி பெறுமா? – வீரர்களை விளாசும் ரோஹித் சர்மா.
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும்
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் இந்த நிலையில் நேற்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது கடந்த 2ஆம் தேதி நடந்தது.
அந்த போட்டி மழை காரணமாக இரண்டாவது இன்னிங் தடைபட்ட நிலையில் இந்தியா நேற்று நேபாளம் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் நேபாளம் அணி 8.2 ஓவரில் போராடி 230 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து சேசிங்கை இந்தியா துவங்கிய போது மழை வந்ததால் 23 ஓவரில் 145 என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.அதை துரத்திய இந்தியாவை கேப்டன் ரோகித் சர்மா 74 ரன்களும் சுப்மன் கில் 67 ரன்களும் அதிரடியாக எடுத்து வெற்றி பெற வைத்தனர்.
அதனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் 1 புள்ளியை பெற்றிருந்த இந்தியா இப்போட்டியில் கிடைத்த 2 புள்ளிகளையும் சேர்த்து 3 புள்ளிகளுடன் சூப்பர் குரூப் ஏ புள்ளி பட்டியலில் 2வது இடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் இந்த போட்டியின் போது இந்திய அணியின் வீரர்கள் சில தவறுகளையும் செய்த்தனர். குறிப்பாக முதல் 20 பந்துகளில் நேபாள் துவக்க வீரர்கள் கொடுத்த 3 கேட்ச்களை ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, இஷான் கிசான் ஆகியோர் கோட்டை விட்டது ரசிகர்களை கடுப்பாக வைத்தது.
அதனால் இந்த சுமாரான பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கை வைத்துக் கொண்டு 2023 உலகக்கோப்பையை எப்படி வெல்லப் போகிறீர்கள் என்று ரசிகர்கள் விமர்சித்தனர். இந்நிலையில் இப்போட்டியில் வென்றாலும் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் மோசமாக இருந்ததாக போட்டியின் முடிவில் ரோஹித் சர்மா அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால் இந்த நிலைமை வருகின்ற 2023 உலகக்கோப்பை போட்டியிலும் தொடருமா? இத்தியா வெல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் தான் நேபாளம் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “இந்த 2 நாங்கள் அதிகமாக பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை. அதில் மழையால் ரத்து செய்யப்பட்ட ஒன்றில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெற்ற நாங்கள் இதில் பந்து வீசும் வாய்ப்பை பெற்றோம். இருப்பினும் நாங்கள் இதுவரை சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை
சில வீரர்கள் காயத்திலிருந்து வந்துள்ளார்கள். ஆனால் சூப்பர் 4 சுற்றுக்குள் சென்றதும் சாக்கு போக்கு சொல்வதற்கான பேச்சே இருக்கக் கூடாது. முதல் போட்டியில் அழுத்தமான சமயத்தில் பாண்டியா மற்றும் இஷான் எங்களை மீட்டெடுத்தனர். இன்று எங்களுடைய பவுலிங் ஓரளவு சிறப்பாக இருந்தும் ஃபீல்டிங் மோசமாக இருந்தது” என்று கூறினார்.