ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் எப்படி இருக்கு? இனி அவர் விளையாடுவாரா? – கேப்டனின் பதில்.

உலக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த ஒருநாள் உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பல அணிகள் 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த உலக கோப்பை

By ·

உலக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த ஒருநாள் உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பல அணிகள் 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த உலக கோப்பையில் தொடர்ந்து மூன்று முறை வென்ற இந்திய அணியானது இன்று பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியானது பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. ஆனால் இந்த போட்டியில் கேப்டன் சகீப் அல் ஹாசன் இல்லை. மேலும் கடந்த சில போட்டிளில் பங்களாதேஷ் அணியானது கொஞ்சம் தடுமாறி வருகிறது. சொல்லப்போனால் முதல் போட்டியை தவிர பங்களாதேஷ் அணியானது 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் இந்த போட்டியை வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் பங்களாதேஷ் அணி இருக்கிறது.

இந்நிலையில் முதல் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், பின்னர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். பங்களாதேஷ் அதிகபட்சமாக ரிட்டன் தாஸ் 66 ரன்களும், ஹாசன் 51 ரன்களும், மஹ்மத்துல்லா 46 ரன்களும் எடுத்தனர் இறுதியில் பங்களாதேஷ் அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை குவித்தது. இந்திய அணியின் சார்பில் பும்ரா, சிராஜ், ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்களையும் தாகூர்,குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டுகளையும் விழித்தனர்.

இந்த ஸ்கோர் இந்தியா அணிக்கு சற்று சவாலான ஸ்கோராக தான் இருக்கின்றது.257 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் நல்ல தொடக்கத்தை கொடுத்து 4 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 28 ரன்களை குவித்துள்ளது. இறுதியில் இந்திய விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பில் அதிக பட்சமாக கோலி 100 ரன்களும்,கில் 53 ரன்களும், ரோஹித் ஷர்மா 48 ரன்களும் குவித்தனர்.

ஆரம்பத்தில் இருந்து பங்களாதேஷ் அணி விக்கெட்டுகளை எடுக்க தடுமாறியே வந்தது. பங்களாதேஷ் அணி சார்பில் மிராஸ் 2 விக்கெட்டுகளையும் ஹசன் மஹ்மூத் 1 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி தற்போது முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது

ரோஹித் ஷர்மா கூறியது:

இது ஒரு நல்ல வெற்றி. நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒன்று. நாங்கள் சரியாகத் தொடங்கவில்லை, பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் நாங்கள் விளையாடிய கடைசி மூன்று ஆட்டங்களில் எங்கள் பீல்டிங் சிறப்பாக இருந்தது. இன்றும் அதைத் தொடர்ந்தோம். அது உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்று. உங்களால் முடிந்த அளவு முயற்சி செய்யுங்கள். பந்து வீச்சாளர்கள் எந்த வகையானா லைன் அண்ட் லென்த் தேவை என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு புத்திசாலிகள். ஜடேஜா அற்புதமாக கேட்ச் எடுத்தார். பாண்டியாக்கு சற்று வலி இருக்கிறது.

பெரிய சேதம் எதுவும் இல்லை, அது நமக்கு நல்லது. ஆனால் அது போன்ற ஒரு காயத்துடன், நாம் ஒவ்வொரு நாளும் மதிப்பீடு செய்ய வேண்டும், தேவையானதைச் செய்வோம். NZ க்கு எதிரான ஆட்டம் ஒவ்வொரு ஆட்டமும் ஒரு பெரிய விளையாட்டு. அணியில் உள்ள அனைவரும் இத்தகைய அழுத்தத்தை கடந்து வந்திருக்கிறோம். கூட்டம் அதிக அளவில் வருகிறது. இது எங்களுக்கு சிறப்பு. கூட்டம் எங்களை ஏமாற்றவில்லை, மேலும் அது பெரிதாகவும் சத்தமாகவும் முன்னேறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை