“இந்த வெற்றியே அவர்களை பற்றி சொல்லும்” அஸ்வின் மற்றும் ஜடேஜா குறித்து பேசிய ரோஹித் ஷர்மா.
நேற்று முன்தினம் தொடங்கிய IND vs WI முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது முடிவடைந்திருக்கிறது. இந்த போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது அந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால் இது சரியான தேர்வாக இருக்கவில்லை. ஏனென்றால் இந்தியாவின் பந்துவீச்சிற்கு தாக்குப்பிடிக்க முடி
நேற்று முன்தினம் தொடங்கிய IND vs WI முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது முடிவடைந்திருக்கிறது. இந்த போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது அந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால் இது சரியான தேர்வாக இருக்கவில்லை. ஏனென்றால் இந்தியாவின் பந்துவீச்சிற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 150 ரன்களில் சுருண்டது. இதற்கு முக்கியமான காரணம் அஸ்வின் மற்றும் ஜடேஜா.
இதனையடுத்து இந்திய அணியானது சிறப்பாக விளைய்டி 421 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டிக்ளர் கொடுத்தது .பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்கை காட்டிலும் மிகவும் மோசமாக விளையாடி 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த இன்னிங்கில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் தன்னுடைய முதல் போட்டியில் வெற்றி பெற்றது.
ரோஹித் ஷர்மா பேட்டி :
இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய ரோஹித் ஷர்மா பேசுகையில் “நாட்டிற்க்காக அடிக்கும் ஒவ்வொரு ரன்களும் மிகவும் முக்கியமானது. கண்டிப்பாக எங்களின் பந்துவீச்சாளர்களின் முயற்சிகளை பாராட்டியே ஆக வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் அணியை 150 ரன்களுக்கும் சுருட்டியது போட்டியை எங்களிடம் கொண்டு வந்தது. எங்களுக்கு தெரியும் இங்கு பேட்டிங் செய்வது சாதாரணம் கிடையாது என்று. நாங்கள் 400 ரன்கள் அடித்து பின்னர் மீண்டும் பந்துவீசவேண்டும் என்று நினைத்தோம். அது சரியாகவும் நடந்தது என்று கூறினார் ரோஹித் ஷர்மா.
அஸ்வின் குறித்து ரோஹித் ஷர்மா :
மேலும் அவர் பேசுகையில் “இந்த போட்டியில் மிகவும் அருமையாக பந்துவீசிய ஜடேஜா மற்றும் அஸ்வின் பற்றி பேசிய அவர் கூறுகையில் இந்த போட்டியின் முடிவே அவர்களை பற்றி பேசுகிறது. அவர் இது போன்ற பல காலமாக செய்து வருகின்றனர். அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்தோம். இது போன்ற பிட்சுங்களில் அவர்களின் அனுபவம் என்பது எப்போதுமே ஒரு வரப்பிரசாதம். ஜடேஜாவும் அஸ்வினும் சிறப்பாக பந்துவீசினார்கள். அதிலும் அஸ்வினின் பந்துவீச்சில் தரத்தை காட்டுகிறது.
எப்போதுமே சிறப்பாக தொடங்குவது நல்லது. நாங்கள் பிட்சை பற்றி அதிகமாக காலை படவில்லை. இங்கு வந்து எங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்தோம். இதே வெற்றியோடு நாங்கள் 2 வது டெஸ்ட் போட்டியிலும் பங்கு பெறுவோம். சில வீரர்கள் இன்னமும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடாமல் இருக்கின்றனர் அவர்களுக்கும் வாய்ப்புகளை தருவோம் என்றார் ரோஹித் ஷர்மா.