எங்களுக்கு மற்றொரு பொல்லார்ட் கிடைத்து விட்டார் – ஐபிஎல் 1000வது போட்டிக்கும் பிறகு ரோஹித் பேட்டி.
ஐபிஎல் தொடங்கி இன்று 1000வது போட்டி நடந்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓ
ஐபிஎல் தொடங்கி இன்று 1000வது போட்டி நடந்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. இந்த இமாலய இலக்கை சேசிங் செய்த மும்பை அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை பெற்றது.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் டின் டேவிட். இவர் தொடர்ந்து ஹோல்டர் வீசிய முதல் 3 பந்துகளில் 3 சிக்சர்களை அடித்து மும்பையை வெற்றி பெற செய்தார். அதுமட்டுமல்லாமல் 14 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் 8 போட்டிகளை இதுவரையில் ஆடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. இதனையடுத்து வரும் 3ஆம் தேதி பஞ்சாப் அணியை எதிகொள்கிறது.
ரோஹித் கூறியது :
இந்நிலையி தான் வெற்றிக்கு பிறகு பேசிய மும்பை அணியின் கேப்டன் கூறுகையில் ” இந்த போட்டியில் சேஸிங் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கடந்த போட்டியிலும் இதே போன்ற சூழ்நிலை நிலவியது. ஆனால் அப்போது தோற்றுவிட்டோம். அனால் இப்போது வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுடைய அணியில் பெரிய ஹீட்டர்களை நிரப்பவும் இடத்திற்கு ஒருவர் கிடைத்து விட்டார். பொல்லார்ட் பல வருடங்களாக எங்களுடைய அணியில் இருந்து பல சாம்பியன் ஷிப்களை வென்று கொடுத்திருக்கிறார்.
அடுத்த பொல்லார்ட் :
ஆனால் அவருடைய இடத்தை டிம் டேவிட் நிரப்புவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவருக்கு அந்த வலிமையும் இருக்கிறது. அவருடைய அதிரடியான ஆட்டத்தினால் பந்துவீச்சாளர்கள் அவருக்கு பந்துகளை வீச யோசிப்பார்கள், ஒரு கேப்டனாக சரியான வீரர்களை எதிரணிக்கு தகுந்தவாறு தேர்வு செய்து வருகிறேன். ஆர்ச்சர் காயம் காரணமாக விளையாடவில்லை. பந்துவீச்சாளர்கள் இன்னமும் சரியான வரிசையில் போட வேண்டும்.
சூரிய குமார் யாதவ் இன்று சிறப்பாக விளையாடினார். நான் ஜெய்ஸ்வாலை கடந்த ஆண்டில் இருந்து பார்த்து வருகிறேன். வருடைய ஆட்டம் இந்த ஆண்டு வேற லெவலுக்கு சென்று விட்டது. அவருடைய ஷாட்டுகள் ஒவ்வொன்றும் சரியான நேரத்தில் இருந்தது. அவருக்கு அப்படிபட்ட சக்தி எப்படி வருகிறது என்று கேட்டேன். அவர் தான் உடற்பயிற்சி கூடத்தில் வேலை செய்வதாக கூறினார். அவருடைய இந்த ஆட்டம் இந்திய அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நல்லது என்றால் ரோஹித் ஷர்மா.