மழை வரும் என்று தெரிந்தும் டாஸ் வென்று பேட்டிங் செய்ய காரணம் என்ன? ரோஹித் விளக்கம்.
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும்
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் இந்த நிலையில் நேற்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது தற்போது நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் மழை வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் தடுமாறிய இந்திய அணி 48.5 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதை தொடர்ந்து 267 ரன்களை துரத்திய பாகிஸ்தானை சேசிங் செய்யவிடாமல் மழை வந்து மொத்தமாக தடுத்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தப்போட்டியில் முக்கியமான தருணம் என்று கூறினால் முன்னதாக ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் ஆகியோருக்கு எதிராக ரோகித் சர்மா போன்றவர்கள் தடுமாறினாலும் விராட் கோலி காப்பாற்றுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ரோஹித் அவுட்டானதும் களமிறங்கிய விராட் கோலி இன்சைட் எட்ஜ் வாங்கி க்ளீன் போல்ட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.
இந்நிலையில் அதற்கு பிறகு பொறுமையாக விளையாடிய இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து பலமான பாட்னர்ஷிப் அமைத்து ரன்களை விளாசி 266 என்ற ஒரு தாக்குப்பிடிக்க கூடிய ஸ்கோருக்கு கொண்டுவந்தனர். ஆனால் அதற்கு பிறகு மழை காரணமாக இரண்டவது இன்னிங்ஸ் நடக்காமல் போனது. ஆனால் ஒருவேலை இரண்டாவது இன்னிங் நடந்து இருந்து மழை பெய்திருந்தது என்றால் ஓவர்கள் குறைக்கப்பட்டு இருக்கும் அது இந்திய அணிக்கும் மிகப்பெரிய பாதகமான சூழ்நிலையாக மாறியிருக்கும்.
ஆனால் டாஸ் போடும் போதே தான் ஏன் பேட்டிங்கை தேர்வு செய்தேன் என்பது குறித்து ரோஹித் சாரம் கூறியிருந்தார். அவர் பேசியது “நாங்கள் இந்த போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். இன்று வானிலை மோசமாக இருந்தாலும் நாங்கள் அதைப் பற்றி எல்லாம் யோசிக்கப்போவதில்லை. நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். இது போன்ற சவால் மற்றும் கடினமான சூழ்நிலைகளை எதிர்த்து விளையாட வேண்டியது அவசியம்.
ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் தொடரை முடித்து நல்ல ஓய்வு கிடைத்திருந்த வேளையில் பெங்களூருவில் நல்ல பயிற்சியையும் மேற்கொண்டோம். எனவே இந்த தொடரில் நாங்கள் அதை வைத்து என்ன சாதிக்க போகிறோம் என்பதை சோதித்து பார்க்க வேண்டும். இதுபோன்ற தரமான அணிகளுக்கு எதிரே நாம் ஒரு சவாலான ஆட்டத்தை விளையாட வேண்டும் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.