வீடியோ : “தம்பி இந்த பரிசை முதலில் இந்தியாவிற்கு கொடு” இஷான் கிஷானை கலாய்த்த ரோஹித் ஷர்மா.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணியானது முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமான வெற்றியை பதிவு செய்தது. ரோஹித் ஷர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் சதம் அடிக்க அவர்கள் இருவரும் அடுத்த ரன்களை கூட 2வது இன்னிங்கில் எடுக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணியானது பெரும்

By ·

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணியானது முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமான வெற்றியை பதிவு செய்தது. ரோஹித் ஷர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் சதம் அடிக்க அவர்கள் இருவரும் அடுத்த ரன்களை கூட 2வது இன்னிங்கில் எடுக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணியானது பெரும் தோல்வியை சந்தித்து. மேலும் இந்த வெற்றியின் மூலம் 2023 – 25 உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் சுற்றில் வெற்றிகரமாக தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது இந்தியா.

இந்நிலையில் முதல் போட்டியில் விளையாடி மைதானம் பேட்டிங் செய்வதற்கு ஏதுவானதாக இல்லை, அவுட் பில்ட் முகவும் மெதுவாகவே இருந்தது. இருந்த போதிலும் எந்த மைத்தனமாக இருந்தாலும் பந்துகளை நாலாபுறமும் பறக்க விடும் கோலி அதிசயமாக இந்த போட்டியில் பெரிதாக எந்த ஷாட்டுகளையும் எடுக்க வில்லை. அதே போல வெஸ்ட் இண்டீஸ் அணியின் எந்த போட்ஸ்மேன்களும் சொல்லிக்கொள்ளும் படியாக விளையாடவில்லை.

இது இப்படியே இரண்டவது போட்டியிலும் தொடர்ந்தால் இந்தியா இந்த டெஸ்ட் தொடரில் வெற்றியடைவது உறுதியாகிவிடும். எனவே வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களால் முடிந்த அளவிற்கு அனைத்தையும் செய்து வெற்றிபெற முயற்சி செய்வார்கள். இப்படி பட்ட நிலையில் தான் இரண்டாவது போட்டியானது நாளை போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் இந்திய நேரப்பபடி இரண்டு 7.30 மணிக்கு தொடங்க இருக்கிறது. மேலும் இந்த இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது குறிப்பிடதக்க சில மாற்றங்களை செய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதனிடையே போட்டிகளில் எப்போதும் நடப்பதை போல பயிற்சி செய்தும் போது சில பேட்டிகள் நடைபெற்றது. இந்த பேட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பேசிக்கொண்டிருக்க ஒரு சுவாரசியமான நிகழ்வும் நடந்தது. அதாவது ரோஹித் ஷர்மா பேசிக்கொண்டிருக்கும் போது நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இஷான் கிஷான் எனக்கு என்ன பரிசு கொடுப்பீர்கள் என்று கேட்டார்.

ரோஹித் ஷர்மா பேட்டி :

அதற்கு பதிலளித்த ரோஹித் ஷர்மா ” உனக்கு என்ன பிறந்த நாள் பரிசு வேண்டும் தம்பி? உன்னிடம் தான் அனைத்தும் இருக்கிறதே. இதை நாம் அணியிடம் தான் கேட்க வேண்டும். சொல்லப்போனால் அந்த பரிசு அணியின் வெற்றியில் பங்காற்றும் அளவுக்கு இருக்க வேண்டும். எனவே நீ எங்களுக்காக 100 ரன்கள் அடித்து பிறந்தநாள் பரிசு கொடு” என்று கூறினார்.

மேலும் 2வது போட்டியில் இந்தியாவை வழி நடத்துவது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “இந்தியாவை இந்த போட்டியில் வழி நடத்துவது மிகப்பெரிய கௌரவமாகும். ஏனெனில் இது போன்ற வாய்ப்புகள் உங்களுக்கு எல்லா நாட்களும் கிடைக்காது”இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 2 அணிகளுமே மிகச் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி மகத்தான வரலாற்றை கொண்டுள்ளது.

எனவே இந்த போட்டியில் அதை தவிர்த்து நான் வேறு எதுவும் எதிர்பார்க்கவில்லை. மேலும் 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கொதித்தெழுந்து நல்ல போட்டியை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என கூறினார். அத்துடன் 2வது போட்டிக்கான விளையாடும் 11 பேர் அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என்றும் ரோகித் சர்மா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை